அழகான நீண்ட நகங்களை வளர்க்க ஆசையா? உடையாத நகங்களுக்கு சூப்பரான டிப்ஸ்…!

கைகளில் நகங்களை அழகாக நீளமாய் வளர்த்து அதில் பிடித்த விதமாக நகப்பூச்சு பூசுதல், நெயில் ஆர்ட் என்று சொல்லப்படும் நகங்களை அலங்காரப்படுத்துதல் போன்றவை சமீப காலமாக மிகப் பிரபலம் அடைந்து வருகிறது. கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நக அலங்காரமானது அழகு கலையில் தனித்துறையாக வளர்ந்து முன்னேறி இருக்கிறது.

இதற்காக போலியான நகங்களை பயன்படுத்தலாம் என்றாலும் அது உண்மையான நகம் போன்று இருக்காது. சில நேரங்களில் கீழே விழுந்து விடலாம். எனவே பலரும் நீண்ட நகங்களை வளர்க்க ஆசைப்படுவார்கள். ஒரு சிலருக்கு நகம் அவ்வளவு சீக்கிரம் வளராது வளர்ந்தாலும் பலவீனமாக அடிக்கடி உடைந்து விடும்.

உங்கள் நகங்களை நீளமாக வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் ஆனால் அது அடிக்கடி உடைகிறது, இல்லையேல் வேகமாக வளர வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள். நிச்சயம் நீண்ட அழகான அதே சமயம் எளிதில் உடையாத நகங்களை நீங்கள் பெறலாம்.

கருவளையத்தைப் பற்றிய கவலையா??? இந்த டிப்ஸ்களை பின்பற்றி கருவளையத்தை சரிசெய்திடுங்கள்…!

1. எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழத்தில் உள்ள விட்டமின் சி நகங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. எலுமிச்சை பழத்தின் தோல் மட்டுமே இதற்கு போதுமானது. எலுமிச்சையின் தோலை கையில் உள்ள நகங்கள் மற்றும் காலில் உள்ள நகங்களில் நன்றாக தேய்த்து விடுங்கள். இதனை சில நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கைகளையும் கால் நகங்களையும் கழுவலாம். இவ்வாறு செய்வதின் மூலம் நகத்தின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் சி கிடைப்பதோடு கை, கால் நகங்களில் பாக்டீரியா இல்லாமல் பாதுகாக்கலாம்.

2. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் விட்டமின் இ நிறைந்துள்ளது‌. மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்ததாகவும் இந்த தேங்காய் எண்ணெய் இருக்கிறது. உறங்கச் சொல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணையைக் கொண்டு நகங்களுக்கு நல்ல மசாஜ் கொடுக்கலாம். எண்ணெயை லேசாக வெதுவெதுப்பாக்கியும் மசாஜ் செய்யலாம். ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து எவ்வாறு மசாஜ் செய்து அதன் பிறகு உறங்கச் செல்லலாம். இவ்வாறு தொடர்ந்து செய்ய நகங்களில் நல்ல மாற்றம் தெரியும்.

3. ஆரஞ்சு :

ஆரஞ்சு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யக்கூடிய ஒன்று. இந்த கொலாஜன் நகங்களுக்கு வளர்ச்சியை தருவதோடு உயிர் சக்தியையும் அளிக்கிறது. ஒரு பவுலில் ஆரஞ்சு சாறு சிறிதளவு எடுத்து உங்கள் விரல்களை அதில் வைக்க வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பத்து நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கைகளை நன்கு கழுவவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்தால் உடனடியாக நல்ல மாற்றம் பெறலாம். மேலும் இது பாக்டீரியாவையும் ஆரம்பத்திலேயே அழித்துவிடும்.

4. ஆலிவ் ஆயில்:

உங்கள் நகங்கள் மிகவும் சேதமடைந்தோ அல்லது எளிதில் உடைய கூடியதாகவோ இருந்தால் உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வு ஆலிவ் ஆயில். ஆலிவ் ஆயில் நகங்களின் உள்பகுதி வரை ஊடுருவி அதன் சேதத்தை சரி செய்யக்கூடிய ஆற்றல் உடையது. ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக்கி அதனை கைகளில் உள்ள நகங்கள் மற்றும் அதன் கணுக்களில் நன்றாக தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவும். இவ்வாறு செய்வதின் மூலம் நகங்களில் உள்ள சேதம் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்படும்.

4. பயோட்டின் :

பயோட்டின் நகங்கள் மற்றும் முடிகளை வளர செய்யக்கூடிய வைட்டமின்களின் இருப்பிடம் ஆகும். இந்த பயோட்டின் உள்ள உணவுகளை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம், அவகேடோ ஆகியவற்றில் பயோடின் அதிகம் நிறைந்துள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி பயோடின் உள்ள மாத்திரைகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

5. முட்டை ஓடு:

முட்டையின் ஓட்டில் கூடுதலாக கால்சியம் சத்து அதிக அளவு உள்ளது. எனவே இந்த முட்டை ஓட்டை நகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். முட்டை ஓட்டை நன்கு சுத்தம் செய்த பிறகு அதனை இடித்து தூளாக்கிக் கொள்ளவும். பிறகு இதனை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கி கைகளில் உள்ள விரல்களில் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் கொண்டு கைகளை கழுவி விடலாம். இந்த பேக்கை அடிக்கடி செய்ய நக வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.

6. தேன்:

தேன் கைகளின் நகங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழித்திட உதவி புரிகிறது. இதற்கு தேனில் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நகங்களில் தடவி விடவும். இதனை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

அட… தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா…!

7. பூண்டு:

பூண்டில் செலினியம் அதிக அளவு உள்ளது. எனவே பூண்டை துண்டாக நறுக்கி அதனை நகங்களில் தேய்த்து விடலாம். பூண்டை நேரடியாக தேய்ப்பதற்கு பதிலாக பூண்டு எண்ணெயையும் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இதனை செய்ய நகங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.