குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு முன் இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

குழந்தைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. குழந்தைகளை சுத்தப்படுத்துவதில் மற்ற உறுப்புக்களை விட மிக கவனமாக இருக்க வேண்டியது குழந்தைகளின் காதை சுத்தப்படுத்தும் பொழுது தான். குழந்தைகளின் காதை சுத்தம் செய்வது என்பது எளிமையான வேலை அல்ல.

பெரியவர்களின் செவிப்பறையை விட குழந்தைகளின் செவிப்பறை மிக மிக மென்மையானதாக இருக்கும். ஏதேனும் பொருட்களைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யும் பொழுது கவனக்குறைவாக குழந்தைகளின் செவிப்பறையை சிதைத்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது.

ஆனால் அதே சமயம் காதை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் மிகவும் முக்கியம். காரணம் காதில் ஏதேனும் அழுக்குகள் தொடர்ந்து படிந்தால் அது ஒரு மெழுகு படலம் போல் தொடர்ந்து படிந்து காதை பிரச்சனைக்கு உள்ளாக்கி விடும். காதில் அரிப்பு அல்லது எரிச்சல், காது கேட்கும் திறன் குறைதல், காதில் இருந்து துர்நாற்றம் வீசுதல், சீல் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே காதை அழுக்குப்படியாத வண்ணம் சுத்தப்படுத்துவதும் மிகவும் அவசியம்.

உங்க குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்குறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க…!

காதுகளை சுத்தப்படுத்துவதற்கு என்று சிறப்பான வழிமுறைகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் காதின் வெளிப்புறத்தில் தான் முதலில் அழுக்குகள் படிய ஆரம்பிக்கும் எனவே ஒரு மென்மையான ஈரத் துணியை வைத்து காதில் வெளிப்புறத்தில் மட்டும் சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். இதை தினமும் செய்யுங்கள் குறித்த பிறகு குழந்தைகளின் காதில் வெளிப்புறத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் ஒரு துண்டைக் கொண்டு துடைத்து எடுத்தால் போதுமானது.

பொதுவாக எந்த ஒரு குழந்தை நல மருத்துவரும் குழந்தைகளின் காதுகளை பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை பரிந்துரைக்க மாட்டார்கள். நீங்கள் இதற்காக பட்ஸை காதில் விடக்கூடாது. இது அழுக்குகளை உள்ளே அழுத்தி இறுக்கமாக படிய வைத்து விட வாய்ப்பு உண்டு.

குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. குழந்தைகளின் காதில் உட்புறம் எந்த ஒரு பொருளும் செலுத்தக் கூடாது.

2. காதின் வெளிப்புறம் கண்களுக்கு புலப்படும் பகுதியில் மட்டும் சற்று ஈரமான சுத்தமான துணியை கொண்டு துடைத்து விட்டால் போதுமானது.

3. இந்த முறையில் சுத்தம் செய்வதை என்றாவது ஒருநாள் செய்யாமல் குழந்தை குளித்து முடித்த பிறகு தினசரி வழக்கமாக அன்றாடம் செய்தல் வேண்டும்.

4. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்தவிதமான சொட்டு மருந்தோ எண்ணெய்யோ காதில் விடக்கூடாது.

உங்கள் குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

5. நீங்கள் கூப்பிட்டவுடன் குழந்தை உடனடியாக திரும்பவில்லை காதில் ஏதேனும் பிரச்சனை என்று உணர்ந்தால் நீங்களாக வீட்டில் வைத்தியம் முயற்சி செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுதல் நல்லது.