இது தெரிஞ்சா இரவு நேரத்தில் இனி போனை தொட மாட்டீங்க…!

அலைபேசி என்பது தற்போது இடுப்பை விட்டு இறங்காத குழந்தை போல எந்நேரமும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்க கூடிய ஒன்றாகி விட்டது. பலரது கை விரல்களும் மொபைல் போனில் திரையை தள்ளிக் கொண்டே இருப்பதையும் அவர்களது கண்கள் மொபைல் போனின் திரையில் பசை வைத்து ஒட்டியதைப் போல அதை விட்டு நகராமல் இருப்பதையும் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இது பகல் பொழுதில் மட்டுமல்ல பெரும்பாலானோர் இரவு பொழுதையும் இப்படித்தான் கழிக்கிறார்கள். சிறிது நேரம் தானே என்று மொபைல் போனை எடுத்து பார்க்கத் தொடங்கி எவ்வளவு நேரம் அதை பயன்படுத்துகிறோம் என்ற கணக்கே இல்லாமல் அதனை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு இரவில் நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதால் பல்வேறு விளைவுகள் உண்டாகும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மொபைல் போனை இரவில் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவுகள்:

1. தூங்கும் நேரத்தை பாதிக்கும்:

மொபைல் போனில் இருந்து உமிழப்படும் ஊதா நிற கதிர்களானது உடலில் சுரக்கும் மெலடோனினை பாதிக்க கூடிய ஆபத்து உண்டு. மெலடோனின் தான் நாம் உறங்கும் நேரத்தை முறைப்படுத்த உதவக்கூடிய ஹார்மோன் ஆகும். தூங்குவதற்கு உதவும் இந்த ஹார்மோனை மொபைலில் வெளிச்சம் பாதிப்பதால் தூக்கம் வெகுவாக பாதிப்படையும். மேலும் அந்த நேரத்தில் மூளை அதிக அளவு சுறுசுறுப்பாக இயக்கம் பெற்று நீண்ட நேரம் மொபைல் ஃபோனையே பயன்படுத்த தொடங்கி விடுவர்.

அதிகளவு இயர் போன் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

2. விழித்திரையை பாதிக்கும்:

மொபைல் போனை கண்களுக்கு அருகாமையில் வைத்து தான் பயன்படுத்துகிறோம். எனவே இதிலிருந்து வரக்கூடிய ஊதா நிற கதிர்களானது கண்களின் விழித்திரையை பாதிக்கக்கூடிய ஆபத்து உண்டு. இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதால் மெல்ல மெல்ல பார்வை குறைபாடு ஏற்படும்.

3. மன ஆரோக்கியத்தை பாதிக்கும்:

உறங்க சென்ற பிறகும் நீண்ட நேரம் மொபைல் ஃபோனையே பார்ப்பதால் உடல் நலன் மட்டும் இல்லாமல் மன நலனும் வெகுவாக பாதிப்படைகிறது. மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள் உடலில் உள்ள ஹார்மோனை பாதிப்படைய செய்கிறது. இதனால் தூங்கும் நேரம் மற்றும் தூங்கும் முறை வெகுவாக பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

4. புற்றுநோய் ஆபத்து:

மொபைல் போனில் இருந்து வரக்கூடிய அதிக அளவிலான எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சு புற்றுநோய் உண்டாக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. தூக்கம் பாதிப்படைவதோடு புற்றுநோய் உண்டாக்கக்கூடிய ஆபத்தும் இரவு நீண்ட நேரம் மொபைல் போன் பார்ப்பதால் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

5. ஞாபகத் திறனை பாதிக்கும்:

மொபைல் போன் தொடர்ந்து பார்ப்பதால் அதிக அளவு மொபைலை சார்ந்து பலரும் இருக்கத் தொடங்குகிறார்கள். பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் மந்தமாகவே காணப்படுவதை பார்த்திருப்போம். இதனால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே ஞாபகத்திறன் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு.