உங்க சாப்பாட்டில் இந்த நான்கு உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்க… குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் இதோ!

ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது அவருடைய உணவுப் பழக்க வழக்கத்தை பொறுத்துதான் அமைகிறது. அதிலும் குறிப்பாக குடலின் ஆரோக்கியத்தை சார்ந்ததால் முழு உடலும் இயங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை ஆரம்பித்து உணவை செரிமானம் செய்யும் வேலை வரை அனைத்து வேலையும் குடலில் இருந்து தான் தொடங்குகிறது.

இந்தக் குடல் ஆரோக்கியம் நோய் இல்லாமல் வாழ்வதற்கும் உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதற்கும் மிகவும் அவசியம். எனவே நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் கூட ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இப்பொழுது நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த ஆயுர்வேத நெய் கிரிமால் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா???

1. நார்ச்சத்து உணவுகள்:

உணவு எளிதில் செரிமானமடைந்து நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து மலச்சிக்கல் பிரச்சனை ஏதும் இல்லாமல் இருப்பதற்கு நம்முடைய உணவு நார்ச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் இந்த நார்ச்சத்து உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய பங்காற்றுகிறது. இதற்காக நீங்கள் உங்கள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியவை

  • கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள்
  • ஓட்ஸ், கீன்வா போன்ற தானிய வகைகள்
  • காய்கறி மற்றும் கீரை வகைகள்
  • ஆப்பிள், பீச் போன்ற பழ வகைகள்
  • பாதாம் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள்

2. பூண்டு:

பூண்டு குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டில் மிக முக்கிய பங்காற்றும் ஆற்றல் உடையது. பூண்டில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது இது குடலில் நோய் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் காக்க உதவுகிறது.

3. தயிர்:

தயிரில் அதிக அளவிலான ப்ரோபயாட்டிக் உள்ளது. இது குடலில் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய துணை புரிகிறது. மேலும் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் உடையது. ஒரு நாளைக்கு 100 கிராம் அளவிலாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை ஏற்படாமல் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

4. கொலாஜன் நிறைந்த உணவு:

கொலாஜன் நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. இதற்கு அன்றாட உணவில் ஏதாவது ஒரு கொலாஜன் நிறைந்த உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள்
  • ப்ரோக்கோலி
  • இறைச்சி
  • முட்டை
  • நட்ஸ்