முடி உதிர்வை தடுக்க வெங்காயத்தின் சாறு போதுமா? வெங்காயத்தில் நிறைந்துள்ள கூந்தல் பராமரிப்பு ஆற்றல்..!

முடி உதிர்வு என்பது பரவலாக காணப்படும் ஒரு கூந்தல் பிரச்சனை ஆகும். இதற்காக பலரும் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டிலேயே இயற்கையான வழியில் இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று ஆராய்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எளிய சிறப்பான தீர்வு தான் வெங்காயத்தின் சாறு.

இது தெரியுமா? கூந்தலை பற்றி உங்களுக்கு தெரியாத அரிய சில தகவல்கள்…!

வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் நல்லது என்பது பலரும் அறிந்த ஒரு தகவல். எனவேதான் சந்தைகளில் வெங்காயத்தால் ஆன ஷாம்பூ, எண்ணெய், சீரம் என அனைத்தும் மிகப் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இந்த வெங்காயத்தால் உண்மையில் கூந்தல் உதிர்வு குறைகிறதா? இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

வெங்காயத்தின் சாறு முடி உதிர்வை வெகுவாக கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல் முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் தலைப்பகுதி வறண்டு காணப்படுதல், பொடுகுத் தொல்லை, முடிகளின் அடிப்பகுதியில் கிளை வெடித்தல், இளநரை, ஸ்கேல்பில் ஏற்படக்கூடிய தொற்று போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய இந்த வெங்காயத்தின் சாறு உதவுகிறது.

வெங்காயத்தில் அளவுக்கு அதிகமான சல்பர் நிறைந்துள்ளது அமினோ அமிலங்களில் காணக்கூடிய இந்த சல்பர் புரதத்தின் மூலக்கூறாக இருக்கிறது. புரதங்கள் குறிப்பாக கரோட்டின் எனும் சத்து கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதற்கு இந்த கரோட்டின் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மேலும் வெங்காயத்தில் காணக்கூடிய சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொண்டது. இந்த கொலாஜன் உற்பத்தி சருமத்தின் செல்களையும் கூந்தல் வளர்ச்சியையும் பாதுகாக்க உதவி புரிகிறது. வெங்காயச்சாறு கூந்தலின் வேர்க்காலுக்கு அதிக அளவு ரத்த ஓட்டம் கிடைக்க செய்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

வெங்காயச்சாறு எப்படி பயன்படுத்தலாம்:

  • வெங்காயத்தை இடித்து சாறை எடுத்து கொள்ளவும்.
  • மூன்று டீஸ்பூன் அளவு வெங்காய சாறு எடுத்தால் அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
  • இப்பொழுது இதனை கூந்தலின் வேர்க்கால்களில் ஒன்றாக தடவி வைக்கவும்.
  • 30 நிமிடங்கள் இதனை அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
  • 30 நிமிடங்களுக்கு பிறகு இந்த மாத ஷாம்பு கொண்டு இதனை கழுவி விடலாம்.

கூந்தலுக்கு வெங்காயச்சாறு பயன்படுத்துவது இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது ஆனால் ஒருவேளை உங்களுக்கு வெங்காயத்தால் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் மருத்துவரை அணுகிய பிறகு பயன்படுத்தலாம்.