இது தெரியுமா உங்களுக்கு? வெறும் வயிற்றில் நெய் குடித்தால் போதும் அனைத்து நோயைகளையும் விரட்டலாம்!

நெய் நம்முடைய அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான உணவுப்பொருள். குறிப்பாக இனிப்பு வகைகள், பருப்பு, ரொட்டி வகைகள் என அனைத்திலும் நெய் இல்லாமல் இருக்காது. பல ஆண்டுகளாக நாம் நெய்யை உணவு பொருளாக பயன்படுத்தி வருகிறோம். நெய் வெறும் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள் மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இந்த நெய்யில் உள்ளது.

நெய் உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெய்யை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கும் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல்வேறு நன்மைகள் உண்டு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வாருங்கள் இவ்வாறு நெய்யை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பார்க்கலாம்.

இந்த ஆயுர்வேத நெய் கிரிமால் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா???

நெய்யில் அதிக அளவு கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலம், நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இயங்கச் செய்ய உதவி புரிகிறது. மேலும் வெறும் வயிற்றில் இந்த நெய்யை குடிப்பதால் இந்த சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். மேலும் உடல் வறட்சி அடையாமல் நீரேற்றத்துடன் காணப்படும். சருமம் சுருக்கம் அடையாமலும் முகப்பரு பிரச்சனை இல்லாமலும் காணப்படும்.

வெறும் வயிற்றில் நெய் குடிப்பதால் சுவாசப் பிரச்சனை தொண்டை மற்றும் மூக்குகளில் ஏற்படக்கூடிய தொற்று ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் சளி காய்ச்சல் போன்ற சாதாரணமாக காணப்படும் வியாதிகளிலிருந்தும் இது உடலை காக்கிறது.

நம்முடைய மூளையின் செயல்பாட்டிலும் நெய் குறிப்பிட்ட அளவிலான நன்மைகளை தருகிறது. மூளை 50 சதவீதம் கொழுப்புக்களால் ஆனது. மூளையின் நரம்பு மண்டலம் முறையாக செயல்பட அதற்கு தகுந்த அளவிலான கொழுப்பு அமிலம் அவசியம். இந்த நெய்யானது மூளைக்கு தேவையான கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை வழங்குகிறது.

முடக்கு வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த நெய்யை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கான வலிகளை குறைத்துக் கொள்ள முடியும். மேலும் இதில் கால்சியம் நிறைந்து இருப்பதால் தினமும் ஒரு ஸ்பூன் உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு எலும்புகள் வலுவடைகிறது. எலும்புகளில் உள்ள திசுக்கள் நன்கு செயல்படவும் உதவுகிறது.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கூந்தலின் வேர்க்கால்களுக்கும் தகுந்த ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியிலும் நல்ல பங்காற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இந்த நெய்க்கு உண்டு. இதில் உள்ள கொழுப்பு அமிலம் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கும்.

முகம் தங்கம் போல் ஜொலித்திட நூறு முறை நெய்யை கழுவ வேண்டுமா?

உடலில் செரிமான சக்தியை அதிகரிக்க செய்து குடல் ஆரோக்கியத்திலும் நன்மை புரிகிறது. நெய் கொழுப்பு சத்து நிறைந்தது இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை வேண்டாம். இது நல்ல கொழுப்புகளால் ஆனதால் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறைப்பிலும் நல்ல பங்காற்றுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 அமிலம் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைத்திட உதவுகிறது.