அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இது ஒன்று போதும்… கற்றாழையின் வித விதமான ஃபேஸ் பேக்குகள்…!

கற்றாழை பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் இருக்கக்கூடிய ஒரு மூலிகை தாவரம் எனலாம். உடல் நலம் , கூந்தல், சருமம் என அனைத்திற்கும் வரப்பிரசாதமாக இந்த கற்றாழை விளங்குகிறது. சருமம் அனைவருக்கும் ஒன்று போல இருக்காது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதேபோல் அனைத்து மூலிகைகளும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் சொல்ல முடியாது.

ஆனால் கற்றாழை அனைத்து விதமான சருமத்திற்கும் ஏற்றது. அதேபோல் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரக்கூடியது இந்த கற்றாழை. இந்தக் கற்றாழையை வைத்து எந்தெந்த சருமத்திற்கு எப்படி பேக் செய்ய வேண்டும், அதனால் எந்த விதமான சரும பிரச்சனைகள் தீரும், எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

1. பளிச்சென்ற சருமத்திற்கு:

சருமம் மிகவும் சோர்வாக காணப்படுகிறது என்றால் நீங்கள் இந்த பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். இது உங்கள் சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க மிகச்சிறந்த பேக்காக இருக்கும்.

கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பேக்கை முகத்தில் தேய்க்கவும். மஞ்சள் மற்றும் தேனின் நற்குணங்களோடு கற்றாழையின் நற்குணமும் சேர்ந்து சோர்வான சருமத்தை பளிச்சென்று மாற்றிவிடும்.

2. சூரிய ஒளியால் பாதிப்படைந்த சருமத்திற்கு:

அதிக அளவு வெயிலில் அலைவதாலும், தற்போது உள்ள வெப்பமான சூழலாலும் முகத்தில் கருமை படிவது இயல்பு. இந்த கருமையை நீக்க இந்த ஃபேஸ் பேக் மிகவும் உதவும். மேலும் கோடை காலத்திற்கு சிறந்த ஃபேஸ் பேக் என்றும் சொல்லலாம்.

எந்த அளவு கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்கிறீர்களோ அதே அளவு எலுமிச்சை பழத்தின் சாறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்திலிருந்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் இதனை கழுவி எடுத்துவிடலாம்.

3. எண்ணெய் பிசுக்காக காணப்படும் சருமத்திற்கு:

இந்த விதமான சருமத்திற்கு வெள்ளரிக்காய் சேர்த்து செய்யும் ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது. இது எண்ணெய் பிசுக்கை நீக்குவதோடு முகத்தில் உள்ள கருமையை சேர்த்து நீக்கும். மேலும் முகத்தில் உள்ள மாசுக்கள் இதனால் முழுமையாக மறையும். இது மற்றுமொரு கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த பேக் என்று சொல்லலாம்.

இதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு வெள்ளரிக்காயை அரைத்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி விடவும் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு கழுவி விடலாம். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்ய முகத்தின் எண்ணெய் பிசுக்கு வெகுவாக குறைந்து விடும்.

4. வறண்ட சருமத்திற்கு:

சருமம் மிகவும் வறட்சியாக காணப்பட்டால் அதற்கு இந்த பேக்கை முயற்சி செய்யலாம். இது முகத்தில் உள்ள துளைகளை இறுக்கமடைய செய்யும். இதனால் சருமம் தொய்வு பெறாமல் இருக்கும். சருமத்தை வறட்சி அடைய விடாமல் எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

கற்றாழையின் செல்லை எடுத்துக் கொள்ள வேண்டும் இதனுடன் வாழைப்பழத்தை தேவையான அளவு மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் ஒரு ஸ்பூன் அளவு தேனையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் இப்பொழுது இந்த பேக்கை முகத்தில் தடவி சில நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான

5. முதுமை அடையும் சருமத்திற்கு:

சருமம் சிலருக்கு சீக்கிரம் முதுமை அடைந்தது போல தோற்றம் அளிக்கும். அவ்வாறு இல்லாமல் என்றும் இளமையாக தோற்றம் பெற இந்த பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த பேக்கில் உள்ள விட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டத்தை தந்து உங்கள் சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்கும்.

இதற்கு ஒரு மேஜை கரண்டி அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு மேசை கரண்டி அளவிற்கு துருவிய கேரட்டை சேர்க்கவும். ஒரு முட்டையின் வெள்ளைக் கரு இதனுடன் சேர்க்கலாம். அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி விடவும். நன்றாக காய்ந்த பிறகு இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் எப்பொழுதும் இளமையாக தோற்றமளிக்கும்.