இது தெரியுமா? கூந்தலை பற்றி உங்களுக்கு தெரியாத அரிய சில தகவல்கள்…!

உங்கள் கூந்தலை பற்றிய அனைத்து விஷயமும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த கட்டுரையை படித்து பாருங்கள். உங்கள் கூந்தலை பற்றி உங்களுக்கே தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கிறது. வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

1. கூந்தல் மற்ற பருவ நிலைகளை விட வெப்பமான பருவ நிலையில் அதிகம் வளருமாம். வெப்பம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை உடையது. எனவே இதனால் கூந்தலின் வேர்பகுதிக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். கூந்தல் நன்கு வளரும். பருவநிலை மட்டுமில்லாமல் கூந்தல் வளர்ச்சியில் உணவு பழக்க வழக்கம், மரபு என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. முடி சாதாரண நிலையில் இருப்பதை விட ஈரமாக இருக்கும் பொழுது 30 சதவீதம் அதிக நீளமாக இருக்கும். நாம் நம்முடைய கூந்தலை அலசி ஈரத்தன்மையுடன் இருக்கும் பொழுது அது வழக்கமான நீளத்தை விட கூடுதலாக இருப்பதை உணர்ந்திருப்போம். மீண்டும் கூந்தல் காய்ந்ததும் பழைய நிலையை அடைந்து விடும். காரணம் ஈரமாக இருக்கும் பொழுது அது விரிவடைகிறது.

3. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கூந்தலின் நிறம் கருப்பாக இருக்கிறது. சிவப்பு நிற கூந்தல் தான் மிகவும் அரிய நிறமாக கருதப்படுகிறது. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களுக்கு மட்டும்தான் சிவப்பு நிற கூந்தல் காணப்படுகிறது.

4. கூந்தலை வைத்தே நிபுணர்களால் நாம் என்ன உணவு சாப்பிட்டோம், என்ன குடித்தோம், எந்த மாதிரியான சூழ்நிலையில் வசிக்கிறோம் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். எனவே தான் தடயவியல் நிபுணர்கள் கூந்தலை முக்கிய ஆதாரமாக கருதுகிறார்கள்.

பளபளப்பான கூந்தலுக்கு இனி கண்டிஷனர் தேவையில்லை… இந்தப் பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்…!

5. உடல் உறுப்புகளில் வேகமாக வளரக்கூடிய திசுக்களில் கூந்தல் இரண்டாவது இடத்தில் உள்ளது. கூந்தலை விட வேகமாக வளரக்கூடியது எலும்பு மஜ்ஜை.