இனி அரிசி கழுவிய தண்ணிய கீழ ஊற்றாதீங்க… இப்படி சருமத்தை பளபளக்க செய்ய பயன்படுத்துங்கள்!

நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் பல பொருட்கள் நம்முடைய உடல் மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடியதாக இருக்கலாம். அப்படி ஒரு பொருள்தான் அரிசி கழுவிய தண்ணீர் .பெரும்பாலும் சாதத்திற்கோ இல்லை இட்லி, தோசை என்று மாவு அரைப்பதற்கோ அரிசி ஊறவைத்து அதை அலசிய தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் இப்படி அரிசி ஊற வைத்த தண்ணீர் சருமத்திற்கும், கூந்தலுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம்! குறிப்பாக அரிசி கழுவிய தண்ணீரால் சருமத்தின் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

அரசி கழுவிய தண்ணீரில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், அமினோ அமிலம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தின் முதுமை அடையும் தன்மையை குறைக்கிறது. சருமத்தை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருந்து இது என்றும் இளமையான தோற்றம் பெற உதவி புரிகிறது. சருமத்தை ஆரோக்கியமாக பளபளக்கச் செய்யவும் ஒரே மாதிரியான நிறத்துடன் தோற்றம் பெறச் செய்யவும் இது உதவி புரிகிறது.

வாவ்.. பப்பாளி பழம் வைத்து அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஏற்ற பப்பாளி ஃபேஸ் பேக்குகள்…!

சருமத்தின் மேல் புற அடுக்கு ஸ்கின் பாரியர் என்று அழைக்கப்படும் அதாவது சருமத்தை பல்வேறு விதமான பாதிப்புகளில் இருந்து காத்திட இது ஒரு உதவி புரிகிறது. இந்த வெளிப்புற அடுக்கை பாதுகாப்பாக வைத்திருக்க அரிசி தண்ணீர் மிகவும் உதவி புரியும். இந்த தண்ணீர் அதிக அளவு ஸ்டார்ச் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஸ்டார்ச் மேல்புற அடுக்கை இயற்கையான முறையில் பாதுகாக்க உதவி புரிகிறது.

அதிக அளவிலான சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும பாதிப்பு, வீக்கம் சருமம் சிவந்த போதல் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இது தீர்வாக இருக்கிறது. சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க இது உதவி புரியும். இதில் உள்ள குளிர்ச்சி தன்மை சூரிய ஒளியால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதோடு சருமம் சூரிய ஒளியால் கருமை அடைவதில் இருந்தும் காக்கிறது.

சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் சத்து உள்ளவர்கள் சருமத்தை அரிசி தண்ணீர் கொண்டு கழுவும் பொழுது எண்ணெய் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இதனால் சருமத்தை முகப்பருக்கள் போன்ற பிரச்சனையிலிருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய இந்த அரிசி கழுவிய தண்ணீரை இனி கீழே ஊற்றாமல் சருமத்திற்கு பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.