வாவ்.. பப்பாளி பழம் வைத்து அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஏற்ற பப்பாளி ஃபேஸ் பேக்குகள்…!

பப்பாளி சருமத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பழ வகை ஆகும். பப்பாளி பழத்தில் உள்ள விட்டமின் ஏ சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. மேலும் இதில் உள்ள பாப்பைன் நொதி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க கூடியது. மேலும் கரோட்டின் சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவுகிறது. இதில் விட்டமின் இ யும் அதிக அளவு உள்ளது. எனவே மிகச் சிறந்த மாய்ஸ்ரைசராகவும் இந்த பப்பாளி இருக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் செல்லை மறுசீரமைப்பு செய்வதில் உதவி புரிகிறது. இந்த பப்பாளி பழத்தை வைத்து முகத்திற்கு எந்த மாதிரியான பேக் போட வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

1. சருமம் பளிச்சென்று இருக்க:

 • நன்கு பழுத்த ஒரு பப்பாளி பழத்தில் தேவையான அளவு சிறிய பகுதியை கிண்ணத்தில் மசித்து எடுத்துக் கொள்ளவும்.
 • இதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாறை சேர்த்துக் கொள்ளவும்.
 • இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • முகத்தை நன்றாக கழுவிய பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் பேக்கை தடவவும்.
 • இதனை 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
 • பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு இதனை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

2. முகப்பருக்களை நீக்க:

 • நான்கு சிறிய பப்பாளி துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
 • இதனை கட்டிகள் ஏதும் இல்லாதவாறு நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
 • இரண்டு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.
 • முகத்தை நன்றாக கழுவி ஈரம் இன்றி துடைத்து விடவும்.
 • இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் பேக்கை தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
 • பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விருப்பமான மாய்ஸ்ரைசரை தடவிக் கொள்ளலாம்.
 • வாரம் இரண்டு முறை இதனை பின்பற்ற முகப்பருக்கள் குறையும்.

3. கருவளையம் நீங்க:

 • ஒரு துண்டு பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளவும்.
 • இதனை நன்றாக கட்டிகள் இன்றி மசிக்கவும்.
 • ஒரு ஸ்பூன் அளவு தேனை இதில் சேர்க்கவும்.
 • விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை இதில் சேர்த்துக் கொள்ளவும்.
 • மூன்றையும் நன்றாக கலந்து முகம் கழுவி பேக் போல போட்டு விடவும்.
 • பேக் நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு கழுவி விடலாம்.

4. சருமம் இளமையான தோற்றம் பெற:

 • கால் கப் அளவிற்கு பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளவும். நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
 • ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதனை அடித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
 • ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து விடவும்.
 • இப்பொழுது முகத்தை கழுவி ஈரம் இன்றி துடைத்த பிறகு இந்த பேக்கை போடவும்.
 • 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 • சுத்தமான துணியால் ஈரம் இன்றி ஒற்றி எடுக்க வேண்டும்.
 • வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் தொய்வு பெற்ற சருமம் இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை பெறலாம்.