குப்பை போல் ஆன மேனியை சரி செய்யும் குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகளா?

தோட்டப்பகுதிகளிலும் குப்பை மீட்டிலும் சாதாரணமாக காணக்கூடிய ஒரு மூலிகை செடிதான் குப்பைமேனி. நோய்களால் குப்பை போல ஆன உடலை சரி செய்யும் தன்மை நிறைந்ததால் இதனை குப்பைமேனி என்று சொல்லப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த குப்பைமேனி மிக முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக கருதப்படுகிறது.

இந்த குப்பைமேனி சரும பிரச்சனை மட்டுமல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் உடையது சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் இந்த குப்பைமேனி மிகச் சிறந்த வரப் பிரசாதமாக இருக்கிறது. வாருங்கள் இந்த குப்பைமேனியால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சருமத்திற்கு ஏற்ற அரிசி நீரை இனி நீங்கள் வீட்டிலேயே இப்படி செய்து பயன்படுத்துங்கள்…!

வயிற்றுப்புழு பிரச்சனை இருப்பவர்கள் இந்த குப்பைமேனி சாற்றை பெரியவர்கள் 20 மிலி அளவும், குழந்தைகள் ஒரு தேக்கரண்டி அளவும் குடித்து வந்தால் வயிற்றுப்புழு பிரச்சனைகள் நீங்கும். இந்த சாறை ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை நீங்கும்.

குப்பைமேனி சாற்றுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து பருகி வந்தால் நாள்பட்ட ஆஸ்துமா வியாதி போன்ற சுவாசப் பிரச்சனைகள் சரியாகும்.

நோய்வாய்ப்பட்டு நீண்டகாலம் நடக்க முடியாத பிரச்சினையால் படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கை புண் ஏற்படும் அவர்களுக்கு இந்த குப்பைமேனி உடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் படுக்கை புண் குணமாகும்.

பல் சொத்தையாகி அந்த வலியால் அவதிப்படுபவர்கள் மூன்று குப்பைமேனி இலையை கசக்கி சொத்தை பல்லின் மேல் வைத்தால் பல்லில் உள்ள கிருமிகள் நீங்கும் பல் வலி குறையும்.

சொறி சிரங்கு போன்ற சரும பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனி சாற்றை சருமத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். சருமத்தில் ஏற்படும் புண் காயம் ஆகியவற்றிற்கும் இந்த குப்பைமேனியை பயன்படுத்தலாம்.

நாம் அன்றாடம் அருகில் இருந்தும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் பல வகையான மூலிகைச் செடிகளில் இந்த குப்பைமேனியும் ஒன்று. எந்த விதமான ரசாயனமும் இல்லாமல் சருமத்தை அழகாய் பராமரிக்க வேண்டும் என்றால் இந்த குப்பைமேனி ஒன்றே போதும். இனி இதன் பயன்பாடு புரிந்து முறையாக பயன்படுத்தி சருமத்தையும் உடல் நலத்தையும் பாதுகாப்போம்.