கோடை காலம் வந்துவிட்டது … இதோ உங்கள் சருமத்திற்கு தேவையான சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!

கோடை காலம் வந்துவிட்டால் பலருக்கும் பல்வேறு பிரச்சனைகளும் சேர்ந்து வந்துவிடும். அதிக அளவு வெப்பம், வியர்வை, சூரிய கதிர்வீச்சு என பல்வேறு காரணங்களால் பல பிரச்சனைகள் உண்டாகலாம். அதில் மிக முக்கியமான ஒன்றுதான் சரும பிரச்சனை. எனவே கோடை காலத்தில் சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். கோடைகால சரும பராமரிப்புக்கு ஏற்ற சில முக்கியமான டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.

1. கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உங்கள் முகத்தை அடிக்கடி சுத்தமான நீரால் கழுவுங்கள். உங்கள் சருமத்தை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள். இதற்காக நீரேற்றம் தரக்கூடிய மாஸ்க் பயன்படுத்தலாம்.

2. வெயில் காலத்தில் நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் சரி இல்லை வெளியில் சென்றாலும் சரி சன் ஸ்கிரீன் அணிவதை கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை அளவுக்கு அதிகமான சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும். சூரிய ஒளியினால் சருமம் கருமையாதல், சுருக்கங்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.

3. மிக குறைவான அளவில் ஒப்பனையை பயன்படுத்துங்கள். சருமத்தில் உள்ள துளைகள் சுவாசிக்க ஏதுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே முகத்தில் பல அடுக்குகள் நிறைந்த ஒப்பனைகளை தவிர்ப்பது நல்லது.

4. லிப் பாம், மாய்ஸ்சுரைசர் என நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் SPF இவர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

5. உங்கள் மாய்ஸ்சுரைசர் அதிக எண்ணெய் பசை இல்லாதவாறு இருக்க வேண்டும். டோனர் பயன்படுத்துபவர் என்றால் வெள்ளரிக்காய், கற்றாழை ஆகியவற்றால் ஆன டோனரை பயன்படுத்தலாம். பழங்களால் ஆன லோசன், ஜெல், மாஸ்க் ஆகியவற்றை உபயோகப்படுத்துதல் சிறந்தது.

வாவ்.. பப்பாளி பழம் வைத்து அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஏற்ற பப்பாளி ஃபேஸ் பேக்குகள்…!

6. தண்ணீர் அதிகம் பருகுங்கள். முகத்தை வெளிப்புறம் என்னதான் சுத்தமான தண்ணீரைக் கொண்டு அடிக்கடி கழுவி வந்தாலும். நம் உடலின் உள்ளேயும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுதல் மிக அவசியம் எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் பருகுங்கள்.