கர்ப்ப காலத்தில் குழந்தையை சுமக்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைந்த வயிற்றுப் பகுதியானது பிரசவத்திற்கு பிறகு தொய்வடைந்து காணப்படுவது இயல்பு. இந்த வயிற்றுப் பகுதியை குறைப்பதற்கு மருத்துவர்கள் சிலர் பெல்ட்டை பரிந்துரைப்பார்கள். இதை அணிந்து கொண்டு இருப்பது அசௌகரியமாக பலரும் உணர்வதால் இந்த பெல்டை பலரும் விரும்புவது இல்லை. ஆனால் இப்படி பெல்ட் எதுவும் அணியாமல் சில பேக்குகள், மசாஜ் மூலம் வயிற்றுப் பகுதியை ஓரளவு குறைக்க முடியும். வாருங்கள் அவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
எண்ணெய் மசாஜ்:
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆக்சிஜனேற்றம் நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இது தொய்வடைந்த வயிற்றுப் பகுதியை சரி செய்ய உதவி புரியும். கைகளில் எண்ணெயை தேவையான அளவு எடுத்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும் 10 நிமிடங்கள் வரை இதனை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் நிச்சயம் மாற்றம் காணலாம்.
கற்றாழை:
கற்றாழையில் மாலிக் அமிலம் என்னும் அமிலம் இயற்கையிலேயே உள்ளது. இந்த மாலிக் அமிலம் தசைகளை இறுக்கமடைய செய்ய உதவுகிறது. கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் ஜெல்லை எடுத்து வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பத்தில் இருந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு கழுவி விடலாம். இதனால் கெட்ட கொழுப்புகள் உறிஞ்சப்பட்டு விடும். சருமம் மென்மையாகவும் இறுக்கமாகவும் மாறும்.
முல்தானி மிட்டி:
முல்தானி மிட்டிக்கு தசையை இறுக்கமடைய செய்ய பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு முல்தானி மெட்டி உடன் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் கலந்து பேக் போல செய்து தொய்வடைந்த வயிற்றுப் பகுதியில் தடவி விட வேண்டும். பேக் 90% காய்ந்த பிறகு இதனை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடவும். வாரம் இரு முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் பெறலாம்.