பிரசவத்திற்கு பிறகு உங்கள் வயிற்றுப் பகுதி தொய்வடைந்து காணப்படுகிறதா? இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்…!

குழந்தையை 9 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிறகு தாய்மாரின் வயிற்றுப் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. பல புதிய தாய்மார்களுக்கு இது குறித்த அச்சமும் கவலையும் இருக்கலாம். இது நிரந்தரமாக இப்படியே இருந்து விடுமோ என்ற பயம் இருக்கலாம் இனி கவலை வேண்டாம். உங்களின் தொய்வடைந்த வயிற்றுப் பகுதியை நீங்கள் தாராளமாக பழைய நிலைக்கு மாற்ற முடியும்.

அதற்கு முதலில் நீங்கள் குழந்தைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாய்ப்பால் புகட்டுங்கள். தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் உடல் எடையை நீங்கள் கட்டுக்குள் வைக்க முடியும். உடல் எடை குறையும் போது உடலில் உள்ள பாகங்கள் இறுகத் தொடங்கும். எனவே உங்கள் தொய்வடைந்த வயிற்றுப் பகுதியும் இருக்கமடையும். முறையாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலமே நீங்கள் வெகுவாக உங்கள் உடல் எடையையும் குறைத்து வயிற்றுப் பகுதியையும் இறுக்கமடைய செய்யலாம்.

அதேபோல் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் அதிகமான உணவு கட்டுப்பாடு இருப்பது நல்லதல்ல. வயிற்றுப் பகுதியை இறுக்கமடைய செய்ய கொலாஜன் உற்பத்தி மிகவும் அவசியம். அதனால் நீங்கள் உண்ணும் உணவில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் இ, எ, சி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். லிபோயிக் அமிலம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் புரதச்சத்து நிறைந்த பால், சீஸ், தயிர், முட்டை, சோயா பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாது உணவில் சேர்த்து வாருங்கள்.

ஒரு குழந்தையை பிரசிவித்த பிறகு உடல் ஓய்வு என்பது மிகவும் அவசியம் தான். ஆனால் உடலை எந்தவிதமான இயக்கமும் இல்லாமல் வைத்து விடாதீர்கள். உங்கள் உடல் தேறிய பிறகு குழந்தையை வைத்துக்கொண்டு காலாற நடப்பது போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். முழுமையாக உடல் சரி ஆன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடற்பயிற்சியை மருத்துவரின் அறிவுரையுடன் செய்யுங்கள். குறிப்பாக சி செக்சன் செய்து குழந்தையை பிரசவித்தவர்கள் மருத்துவ அறிவுரை இல்லாமல் எடை தூக்குதல் போன்ற எந்த விதமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். மிதமான அதே சமயம் வயிற்றுப் பகுதியை குறைக்கும் படியான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அதிக அளவு தண்ணீர் பருகுவதும் மிகவும் முக்கியம். அதிக அளவு தண்ணீர் பருகுவதால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிப்பதோடு உடல் ஈர்ப்பதம் அடைகிறது. உடல் ஈரப்பதம் இல்லாமல் வறட்சியாக இருக்கும் பொழுது தால் அது மேலும் தொய்வடைந்து காணப்படும். எனவே உடல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உங்களால் முடிந்த அளவு தண்ணீர் பருகுங்கள். ஒரு லிட்டர் அளவிலான குடுவையில் தண்ணீர் பிடித்து அருகில் வைத்திருந்து அவ்வப்போது பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் முயற்சி செய்தாலே போதும் உங்கள் வயிற்றுப் பகுதியை தொய்வடைந்து இருப்பதை நீங்கள் நிச்சயம் சரி செய்து பழைய நிலையை அடைய முடியும்.