சருமத்திற்கு ஏற்ற அரிசி நீரை இனி நீங்கள் வீட்டிலேயே இப்படி செய்து பயன்படுத்துங்கள்…!

அரிசியை ஊறவைத்து அல்லது வேக வைத்து அதில் இருந்து பெறப்படும் தண்ணீரானது பல்வேறு சரும ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. சருமத்தின் எண்ணெய் பசையை குறைத்து முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவி புரிகிறது. சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும் உதவி புரிகிறது.

சருமத்தை ஆரோக்கியமான முறையில் பளபளக்கச் செய்யவும் பயன்படுகிறது. இத்தனை ஆரோக்கியம் நிறைந்த அரிசி நீரை எவ்வாறு தயாரிக்க வேண்டும். அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

இனி அரிசி கழுவிய தண்ணிய கீழ ஊற்றாதீங்க… இப்படி சருமத்தை பளபளக்க செய்ய பயன்படுத்துங்கள்!

வேகவைக்கும் முறையில் அரிசி நீரை தயாரித்தல்:

  • இது நாம் எப்பொழுதும் சாதம் வடிக்கும் முறை போல தான். தேவையான அளவு அரிசி எடுத்து அதனை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
  • வழக்கமாக சாதம் வேக வைக்க தேவைப்படும் தண்ணீரை விட அதிக அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
  • குக்கரில் வைக்காமல் நேரடியாக பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கழுவிய அரிசியை சேர்த்து அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த தண்ணீரை ஒரு கண்ணாடி கொள்கலனில் ஊற்றி 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை அறை வெப்பநிலையில் அப்படியே வைத்து விட வேண்டும்.

ஊற வைக்கும் முறையில் அரிசி தண்ணீரை தயாரித்தல்:

  • தேவையான அளவு அரிசி எடுத்து அதனை நன்றாக அலசி கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது இதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
  • குறைந்தது ஒரு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.
  • அரிசி நன்றாக ஊறிய பிறகு அரிசியில் இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனை ஒரு கண்ணாடி கொள்கலனில் ஊற்றி வைக்கவும்.
  • அறை வெப்பநிலையில் ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை இதனை அப்படியே வைத்திருந்து பிறகு பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை :

  • தயாரித்து வைத்திருக்கும் தண்ணீரில் காட்டன் பஞ்சை நனைத்து முகம் முழுவதும் அந்த நீரை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக சருமத்தில் ஊடுருவிய பிறகு இதனை அரை மணி நேரம் அப்படியே வைத்து விடவும். அரை மணி நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தினை கழுவி விடலாம்.
  • அரிசி கழுவிய தண்ணீரை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இரண்டு மேசை கரண்டி அளவிற்கு ரோஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை தூய்மையான ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து முகத்திற்கு டோனராக காலை மற்றும் இரவு பயன்படுத்தி வந்தால் பளபளப்பான சருமம் பெறலாம்.
  • நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மாய்ஸரைஸருடன் நீங்கள் தயாரித்த அரிசி நீரை சிறிதளவு சேர்த்தும் பயன்படுத்தலாம். இது மேலும் உங்கள் முகத்தை நீரேற்றத்துடன் வைத்திருந்து பளபளக்க செய்யும்.