உங்களுக்கு தெரியுமா? தேங்காய் பாலில் ஒளிந்து இருக்கும் வியக்க வைக்கும் சரும பராமரிப்பு!

தேங்காய் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவுப் பொருள். பெரும்பாலான குழம்பு வகைகள், கறி வகைகள், பொரியல்கள் என பல ரெசிபிகளில் தேங்காய் இடம்பெறும். தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், தேங்காய் பால் என ஏதாவது ஒரு வடிவில் தேங்காயை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும் சில சாத வகைகள் அல்லது குழம்பு வகைகள் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் பொழுது கூடுதல் சுவையாக இருக்கும். இந்த தேங்காய் பால் சமையலுக்கு மட்டுமல்ல நம் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை மிளிரச் செய்ய இந்த தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. வாருங்கள் தேங்காய் பாலில் புதைந்துள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க தேங்காய் பால் உதவுகிறது. சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தில் தேங்காய் பால் தடவி வர அந்த பாதிப்பு வெகுவாக குறையும்.

2. வறட்சியான சருமத்திற்கு தேங்காய்ப்பால் மிகச் சிறந்த மாய்ஸ்ரைசராகும். வறட்சியான சருமத்தில் தேங்காய் பால் தடவினால் வறண்ட சருமம் மாய்ஸ்சுரைஸ் அடைந்து மிருதுவாக மாறும்.

3. பாலை போலவே தேங்காய் பாலும் முகத்திற்கு சிறந்த கிளன்சராக இருக்கிறது. முகத்தில் உள்ள மாசுக்கள் நீக்க, மேக்கப்பை கலைய பாலை பயன்படுத்துவது போல தேங்காய் பாலையும் உபயோகிக்கலாம்.

4. தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சேர்ந்து சருமத்தில் சுருக்கங்களை நீக்க உதவுகிறது. மேலும் சருமத்தை இயற்கையாக பொலிவு பெற செய்கிறது. இதனால் சருமம் முதுமை அடைவதில் இருந்து காக்கப்படுகிறது.

5. தேங்காய் பால் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி தன்மைகள் நிறைந்து இருக்கிறது. இதனால் சருமத்தை தொற்றுகள் ஏற்படாத வண்ணம் காக்கிறது. சருமத்தில் தொற்றுகள் இருந்தால் அதை சரி செய்யவும் உதவுகிறது.