உங்க கிச்சன் வாஸ்து சரியா இருக்கா? அதை தெரிஞ்சுக்க இதை முழுமையா படியுங்கள்…!

ஒரு வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் விட முக்கியமாக கருதப்படுவது சமையலறை தான். சமையல் அறை தான் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தில் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது. வீட்டில் மற்ற அறைகள் வாஸ்துபடி எப்படி இருந்தாலும் சமையல் அறை வாஸ்து சரியாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

சமையல் அறையில் வாஸ்து சரியாக இருந்தாலே ஒட்டுமொத்த வீட்டில் செல்வ வளமும் மகிழ்ச்சியும் பெருகும். வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நோய்வாய் படாமல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த சமையல் அறையின் வாஸ்து எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  1. ஒரு வீட்டில் தென்கிழக்கு மூலைகள்தான் சமையல் அறை அமைக்கப்பட வேண்டும். இதுதான் அக்கினி மூலையாக கருதப்படுகிறது இந்த அக்னி மூலையில் தான் சமையல் அறை அமைக்கப்பட வேண்டும்.
  2. சமையல் அறையில் தென்கிழக்கு பகுதியில்தான் அடுப்பையும் வைக்க வேண்டும். இந்த இடத்தில் சிங்க் வைப்பதோ இல்லை செடிகள் வைப்பதோ கூடாது.
  3. அடுப்பினை தென்கிழக்கு பகுதியில் வைத்து சமைப்பவர் கிழக்கு நோக்கி பார்த்து சமைக்கும்படி அடுப்பை அமைக்க வேண்டும்.
  4. சமையல் அறையில் சிங்கை வடகிழக்கு பகுதியில் வைப்பது நல்லது. இந்தப் பகுதியில் எப்பொழுதும் தண்ணீர் இருப்பது சிறந்தது.
  5. வடகிழக்கு பகுதியில் சிங்க் அமைக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை அந்த வடகிழக்கு பகுதியில் ஒரு குடத்திலோ அல்லது பாட்டிலிலோ தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.
  6. சமையல் அறையில் உப்பு மற்றும் மஞ்சள் எப்பொழுதும் நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உப்பை உயரமான இடத்தில் எட்டி எடுப்பது போல வைக்காமல் கீழே குனிந்து எடுப்பது போல வைக்க வேண்டும்.
  7. உப்பை சில்வர், பிளாஸ்டிக் ஆகியவற்றில் வைப்பதை விட கண்ணாடி குடுவையில் கொட்டி வைக்கலாம். உப்பின் அளவு குறையாமல் நிறைவாக இருக்கும் படி எப்பொழுதும் வைத்திருந்தால் அந்த குடும்பத்தின் செல்வ வளம் பெருகும் என்று கருதப்படுகிறது.
  8. சமையல் அறையில் தெற்கு சுவற்றில் எந்தவிதமான கத்தி போன்ற கூர்மையான உபகரணங்களை மாட்டக்கூடாது. இவ்வாறு செய்வதால் சமைப்பவரின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

இவையெல்லாம் சில அடிப்படையான சமையல் அரை வாஸ்து குறிப்புகள். இவற்றில் உங்கள் கிச்சனில் எதையெல்லாம் மாற்ற முடியுமோ அவற்றை மாற்றி பயன் பெறுங்கள்..!