துலாம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

துலாம் ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

விநாயகர் வழிபாடு மற்றும் நரசிம்மர் காயத்ரி வழிபாடு செய்து வாருங்கள். தோல் சார்ந்த பிரச்சினைகள், முதுகுத் தண்டு வடம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

எடுத்த காரியங்களை துணிச்சலுடன் செயல்பட்டு முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் அளவு படிப்படியாக உயரும்.

பிள்ளைகள் விஷயத்தில் கோப தாபங்கள், வாக்குவாதங்கள் வேண்டாம். உறவினர்களுடன் மன ஸ்தாபங்கள் வேண்டாம். உறவினர்கள் தவறே செய்து இருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும், விடுபட்டுப் போன தெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள்.

தொட்டது துலங்கும் காலகட்டம் என்றே 2024 ஆம் ஆண்டினைச் சொல்லலாம். உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

நீண்ட நாட்களாக இருந்தவந்த சிக்கல் படிப்படியாக் குறைவதைக் கண் கூடாகப் பார்க்கலாம்.

பூமி சம்பந்தப்பட்ட முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகம் ரீதியாக மிகப் பெரிய ஏற்றங்களும், அனுகூலங்களும் நிறைந்த காலகட்டமாக 2024ஆம் ஆண்டு இருக்கும்.

பூர்விகச் சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் சமாதானத்திற்கு வரும். வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என்பது போன்ற உங்களின் நீண்ட கால ஆசையினை நோக்கி நகர்வீர்கள்.

குடும்பத்தில் சுப காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். பெரியவர்களுடன் வாக்குவாதங்கள் கூடாது. தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.

வேலைவாய்ப்பு ரீதியாக இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தொழில்ரீதியாக நீங்கள் செய்ய நினைக்கும் எந்தவொரு மாற்றத்தையும் செய்யலாம்.