கன்னி புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

கன்னி ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

விநாயகர் வழிபாடு மற்றும் பெருமாள் வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் சென்று கடவுளை தரிசித்துவிட்டு வாருங்கள்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும், எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டங்கள் படிப்படியாய் குறையும்.

நிம்மதியுடன் எடுத்து காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்; பயணங்கள் உங்களுக்கு ஆதாயம் தருவதாய் அமையும்.

இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என மாற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு இருக்கும்.

பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு சிறு உடல் தொந்தரவுகள் பெரும் பிரச்சினைகளாக மாறி மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இடையே சரியான புரிதல் இன்மையால் பெரும் பிரச்சினைகள் உருவெடுக்கும்; மூன்றாம் நபர்களின் தலையீட்டால் அந்தப் பிரச்சினைகள் பிரிவுக்கு இட்டுச் செல்லும்.

பிள்ளைகளை மனதில் கொண்டு எந்தவொரு முடிவினையும் எடுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுங்கள் அதுவே உங்கள் உங்கள் வாழ்க்கையினைச் செம்மையாக்கும்.

உங்களுடைய ராசியில் கேது பகவானும், 7 ஆம் இடத்தில் ராகு பகவானும் இருப்பதால் நீங்கள்தான் பொறுமையாகச் செயல்படுதல் வேண்டும்.