சிம்மம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

சிம்ம ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

விநாயகர் வழிபாடு மற்றும் அனுமன் வழிபாடு மிகப் பெரிய ஏற்றத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

எதிர்பார்க்காத இடங்களில் இருந்து சுபச் செய்திகள் உங்களைத் தேடி வரும். தொழில் மாற்றம், படிப்பு மாற்றம், வேலை மாற்றம் போன்றவை ஏற்படும்.

உங்கள் வாழ்க்கையில் நிகழும் எந்தவொரு மாற்றத்தினையும் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராகுங்கள்.

குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம், அதேபோல் நீங்களும் பிறர் குடும்ப விஷயங்களில் தலையீடு செய்யாதீர்கள்.

புதிதாக ஒருவரிடம் பழகும் போது கவனமாகப் பழகுதல் அவசியம். எதிர்பாலித்தனவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

குடும்ப உறுப்பினர்கள் மீதான பொறுப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு ரீதியாக பெரிய அளவிலான ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கும்.

தொழில்ரீதியாக அனுகூலமான விஷயங்கள் நடைபெறும், விபரீத ராஜயோகம் பல நேரங்களில் அடிக்கப் பெறும்.

ராகு பகவானின் அமைப்பு அஷ்டமத்தில் இருப்பதால் கடல் கடந்து வேலைக்குச் செல்வீர்கள்.

இரண்டாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் வார்த்தை ப்ரயோகத்தில் மிகக் கவனம் தேவை. மிகக் கோபமான சூழ்நிலைகளிலும் தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

உடன் பிறப்புகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம்; அமைதி காத்துச் செயல்பட்டால் மட்டுமே பலவித பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.

வார்த்தைகளால் பெரிய அளவிலான பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.