கடகம் புத்தாண்டு – 2024 ராசி பலன் இதோ!

கடக ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

சிவ பெருமானை வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கப் பெறும். அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.

மே மாதம் வரையிலான காலகட்டத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்; இரவு நேரப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் கால் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை.

மன அழுத்தம் ஏற்படும். உடற் பயிற்சி, தியானம், யோகா போன்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்துவரவும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு பெரிய பிரச்சினைகளாக உருவெடுக்க வாய்ப்புண்டு.

தொழில் ஏற்றம் தருவதாய் இருக்கும்; நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற மாற்றமானது நடந்தேறும்.

வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரிகளுடனும் சரி, சக பணியாளர்களுடனும் சரி தர்க்கம் வேண்டாம்.

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். மேலும் சிலருக்கு பதவி உயர்வு, அதிகாரம் கிடைத்தல் என்பது போன்ற விஷயங்கள் நடந்தேறும்.

வேலைவாய்ப்பு ரீதியாக அபரீத யோகப் பலன்கள் ஏற்படும். உங்களின் வார்த்தைக்கு மரியாதை கூடும்.

சுப காரியங்கள் ரீதியாக இருந்துவந்த அத்தனை தடைகளும் சரியாகும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் செய்து வெற்றி காண்பீர்கள்.

மார்ச் மாதத்திற்குப் பின் ஏற்படும் மாற்றங்கள் அபரிவிதமான மகிழ்ச்சியினைக் கொடுப்பதாய் இருக்கும்.