மிதுனம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

மிதுன ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

குரு பகவான் வழிபாடு மற்றும் மகான்களின் வழிபாடு சகல விதங்களிலும் ஏற்றம் தருவதாய் இருக்கும். உடலின் இடது பக்கத்தில் தேக ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும்.

முழு அளவிலான உடல் பரிசோதனையினைச் செய்யுங்கள். சுப காரியங்களில் ஏற்கனவே இருந்துவந்த சிக்கல்கள் மார்ச் மாதத்திற்குள் படிப்படியாகக் குறையும்.

விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும்; தேவையில்லாத செலவுகள் அடிக்கடி ஏற்படும். முடிந்தளவு தங்கம் வாங்குதல், வீடு வாங்குதல், மனை வாங்குதல் என்பது போன்ற சேமிப்புகளில் கவனம் செலுத்திவிடுங்கள்.

வேலைவாய்ப்புரீதியாக மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும்; இருக்கும் வேலையினைவிட்டு விட்டு புது வேலைக்கு முயற்சிக்கும்போது இருக்கும் வேலையும் கையைவிட்டு போய்விடக் கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுய தொழில் செய்ய வேண்டும் என்ற உங்களின் ஆசையானது நிறைவேறும்; எதிர்பார்த்த இடங்களில் கடனுதவி கிடைக்கப் பெறும்.

பெற்றோர், பெரியோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடற் பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே பலவிதமான ஆரோக்கியக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.

பூர்விகச் சொத்துகளில் இருக்கும் பிரச்சினைகளை கோர்ட், வழக்கு என்று எடுத்துச் செல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்ளுதல் நலம்.

மேல் அதிகாரிகளுடனும், சக பணியாளர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் கூடாது. பேசும்போது நிதானித்துப் பேசுதல் அவசியம்.

கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.