ரிஷபம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

ரிஷப ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

விநாயகர் வழிபாடு மற்றும் முருகர் வழிபாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தினைக் கொடுக்கும். பிரசித்த பெற்ற விநாயகர் மற்றும் முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் சென்று வாருங்கள்.

வெளிவட்டாரம், தொழில், வியாபாரம் போன்றவை அனுகூலத்தினைத் தருவதாய் இருக்கும். இதுவரை தொழிலில் பெரும் ஏமாற்றம் மற்றும் அவமானத்தினை சந்தித்து இருப்பீர்கள்.

இனி தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; தொழில் அபிவிருத்தி, வேறு தொழில் மாற்றம் செய்தல் என நீங்கள் பலவகையிலும் ஏற்றம் தரும் விஷயங்களைச் செய்வீர்கள்.

தொழில்ரீதியான பயணங்கள் உங்களுக்கு அனுகூலத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

குடும்பத்தில் ஏற்கனவே கணவன்- மனைவி இடையே இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒருவரையொருவர் தங்களைப் புரிந்து கொள்வர். அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கூடுதல் அன்புடன் இருப்பர்.

சுப காரியங்கள் ரீதியாக பெரிய அளவிலான தடைகளைக் கடந்த காலங்களில் சந்தித்து இருப்பீர்கள். தற்போது அந்தத் தடைகள் உடைந்து சுபம் தரும் விஷயங்கள் வீட்டில் நடந்தேறும்.

வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. முதுகு தண்டுவடம், கழுத்துவலி என உடல் நலத் தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்தது போன்ற வரன் அமையப் பெறும். குழந்தைகள் சார்ந்த விஷயங்கள் பலவும் உங்களுக்கு ஏற்றம் தருவதாய் இருக்கும்.