மேஷம் புத்தாண்டு – 2024 ராசி பலன் இதோ!

மேஷ ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

விநாயகர் வழிபாடு மற்றும் துர்க்கை வழிபாடு மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த வழிபாடாகும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது மிக மிக நன்மையினை ஏற்படுத்திக் கொடுப்பதாய் இருக்கும்.

முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் ஏற்படும்; உடற் பயிற்சியில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

உத்தியோகம், தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். புதிய முதலீடுகள் லாபத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

வேலைவாய்ப்பு ரீதியாக எடுத்துக் கொண்டால் ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.

தொழில்ரீதியாக வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில்ரீதியாக இதுவரை சந்தித்துவந்த இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். எடுத்த காரியங்கள் ஜெயம் கொடுப்பதாய் இருக்கும்.

நீண்ட நாட்களாக உங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருந்த விஷயங்கள் தவிடு பொடியாகும்.

பூமி, சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம் என ஏற்றத்திற்கு உரித்தான காலகட்டம் என்றே இதைச் சொல்லலாம்.

சுப காரியத் தடைகள் சட்டென்று விலகும். பிள்ளைகளைப் பொறுத்தவரை படிப்புரீதியாக மந்தநிலையில் இருந்து மேம்பட்டுக் காணப்படுவர்.

திருமண காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் படிப்படியாய் குறையும்; நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற வரன் அமையப் பெறும்.

நண்பர்களால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். தேவையற்ற நட்பினைத் தவிர்த்தல் நல்லது.