துலாம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். துலாம் ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியில் குரு பகவான் 8 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்.

குரு பகவானின் பார்வையினைக் காட்டிலும், இட அமர்வினைக் காட்டிலும் குரு பகவான் மறைவதுதான் கூடுதல் சிறப்பு. பொதுவாக துலாம் ராசிக்கு குரு பகவான் பாவ கிரகமாக வருவார்.

குரு பகவான்  6, 8, 12 ஆகிய இடங்களில் மறையும்போதுதான் தீய பலன்கள் குறைந்து நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

8 ஆம் இடத்துக் குரு பகவானால் பகை, நோய் போன்றவைகள் படிப்படியாக விலகும். 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கையில் தேவையில்லாத விஷயங்களைச் செய்ய வைத்துவிடுவார்.

8 ஆம் இடத்தில் இருக்கையில் தேவையில்லாத விஷயங்கள் செய்வதை அவரே தடுப்பார். குரு பகவான் துலாம் ராசிக்கு விரயங்களை ஏற்படுத்தினாலும் அது சுப விரயச் செலவுகளாகவே இருக்கும். 

குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பல ஆண்டுகளாகத் தள்ளிப் போன சுப காரியங்கள் வீட்டில் நடந்தேறும். சுப காரியங்களுக்குத் தேவையான கடனுதவிகளைக் கிடைக்கச் செய்வார் குரு பகவான்.

வாகனம் வாங்குதல், மாற்றம் செய்தல் போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு ஏற்ற காலகட்டமாக குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு இருக்கும்.

8 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 2 ஆம் இடத்தினைப் பார்ப்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனம் தேவை; சொல்லிவிட்டு செய்வதைக் காட்டிலும் முடிந்தளவு செய்து முடித்தபின் சொல்வது நல்லது.

குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு வருவதால் முதலீடுகள் செய்யும் முயற்சியில் இருப்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம். அனுபவம் இல்லாத தொழில் செய்தல், அனுபவம் இல்லாத நபர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.