விருச்சிகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். விருச்சிக ராசி அன்பர்களே குரு பகவானின் கருணைப் பார்வை உங்கள்மீது விழுகின்றது.

குரு பகவான் நேர்கோட்டுப் பார்வையில் அதாவது 180 டிகிரி பார்வையில் விருச்சிக ராசியினைப் பார்வையிடுகிறார். இதனால் துவண்டு போய் இருந்த விருச்சிகராசி அன்பர்கள் இனி புத்துணர்வுடன் எழுந்து வீறு நடை போடத் தயார் ஆவர்.

நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்துக் காணப்படுவீர்கள். பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த நிலையில் தற்போது அதற்கு நிவர்த்தியானது கிடைக்கப் பெறும்.

போதுமான அளவு முன்னேற்றத்திற்கு குரு பகவான் உங்களுக்குத் துணை புரிவார். மேலும் வேலைவாய்ப்பு ரீதியாக எந்தவித மாற்றமும் இல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்திருப்பீர்கள்.

தற்போது நீங்கள் இருக்கும் வேலையில் இருந்து மாற்றம் செய்யலாம்; இதுவரை வேலையே கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார்போல் புது வேலையானது கிடைக்கப் பெறும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை திருமண வரன்கள் தட்டிப் போன நிலையில் தற்போது அவை கைகூடும்.

குடும்ப வாழ்க்கையிப் பொறுத்தவரையில் குடும்பத்தின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்.

வண்டி, வாகனங்கள் வாங்குதல், எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குதல், தங்க நகைகள் வாங்குதல் என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்போருக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த மனக் கசப்புகள் சரியாகும்.

மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்விரீதியிலான திட்டங்களை வகுத்து அதனைச் செயல்படுத்தி முடிப்பீர்கள். மேலும் குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து வரை சென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒன்று சேர்வர்.

பணரீதியிலான பெரும் பிரச்சினைகளை நண்பர்களுடன் சந்தித்து இருப்பீர்கள். நீண்ட கால ஆசைகளை நீங்கள் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.