கன்னி குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். கன்னி ராசி குரு பகவான் 9 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து இட அமர்வு செய்கிறார். 9 ஆம் இடத்து குரு பகவான் பாக்கிய குரு பகவானாக வருகிறார்.

இந்த குரு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்ட குரு பகவானாக இருப்பார். 4 மற்றும் 7 ஆம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் 9 ஆம் இடத்தினைப் பார்க்கிறார்.

அதிர்ஷ்டக் காற்று உங்களை நோக்கி வீசும், ராகு- கேது 1 மற்றும் 7 ஆம் இடங்களில் உள்ளது. சனி பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார்.

எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் தவிடு பொடியாகிவிடும். வாய்ப்புகள் உங்களுக்காகவே உருவாகும். உங்கள் மீதான பழிச் சொல் தானாகவே விலகிவிடும்.

கேது பகவான் பொதுவாக ஒரு இடத்தில் இருக்கும்போது அவர்களைச் சோர்வாக்கிவிடுவார். ஆனால் சுப கிரகத்தின் பார்வை கேது மீது விழுந்தால் அந்த கிரகத்தின் தன்மை நேர்மறையாக மாறிவிடும்.

நீங்கள் வேண்டிய விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும் காலகட்டமாக குரு பெயர்ச்சி காலம் இருக்கும். உங்களுக்கு உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் உறவினர்கள், உடன்பிறப்புகள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் உதவிக் கரம் நீட்டுவர்.

குரு பகவானின் பார்வை 5 ஆம் இடத்தில் விழுவதால் குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.

திருமண காரியத்தினைப் பொறுத்தவரை இதுவரை திருமண காரியங்கள் தள்ளிப் போன நிலையில் தற்போது குருவின் பார்வை விழுவதால் எதிர்பார்த்தது போன்ற வரன் கைகூடும்.

காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யும் அமைப்பானது சிறப்பாகவே உள்ளது.

புது வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, தொழில் அபிவிருத்தி, புதுத் தொழில் துவங்குதல் என்பது போன்ற விஷயங்கள் நடக்கப் பெறும்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.