2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். மிதுன ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியில் குரு பகவான் 12 ஆம் இடத்தில் இட அமர்வு செய்வது குறித்து சிறு சிறு பயம் உங்கள் மனதில் இருக்கும்.
குரு பகவான் விரயச் செலவுகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். சுப கிரகமான ரிஷப வீட்டில் குரு பகவான் அமர்வு செய்வதால் மிதுன ராசிக்காரகளுக்கு சுப செலவுகள் ஏற்படும்.
வாகனங்களை மாற்ற நினைத்திருந்த நிலையில் தற்போது புது வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மிதுனத்திற்கு கன்னி 4 வது வீடாக இருப்பதால் வீடு, மனை வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள்.
குரு பெயர்ச்சி காலகட்டத்தில் தாயார்மீது அதீத பாசத்தில் இருப்பீர்கள். தாய்வழி ரீதியில் உங்களுக்கு பணம் சார்ந்த ஆதாயங்கள் ஏற்படும்.
குரு பெயர்ச்சி காலகட்டத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு லோன் எடுப்பீர்கள். அதனை சுப விரயமாகச் செய்து சேமிப்பாக மாற்றுவீர்கள்.
உடல் ரீதியாக தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும்; அதிலும் குறிப்பாக அடிவயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ரீதியான சிகிச்சைகளை மேற்கொண்டு உடல் நலக் கோளாறுகளில் இருந்து மீள்வீர்கள்.
குரு பகவான் 8 ஆம் வீடான மகரத்தில் பார்வையினைப் பதிப்பதால் குடும்பத்தின் மீதான உங்களின் பொறுப்புகள் சிறிதளவு குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
பணம் சார்ந்த விஷயங்களில் குரு பகவான் விரயத்தினை ஏற்படுத்தி விடுவார். முதலீடு செய்கையில் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து, முன் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசித்துச் செயல்படுங்கள். இல்லையேல் குரு பகவான் உங்களின் பணத்தினைக் கரைத்து விடுவார்.
தொழில் செய்வோர் கூட்டுத் தொழில் துவங்குவதைக் காட்டிலும் தனித்துத் துவங்குவதே நன்மை பயக்கும். குரு – சந்திர சேர்க்கை நன்மையினை ஏற்படுத்தும்.
குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.