கடகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். கடக ராசி அன்பர்களே குரு பகவான் 11 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து இட அமர்வு செய்கிறார்.

குரு பெயர்ச்சியானது கடக ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சனி பகவானால் தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை என பலவிதமான தடைகளைக் கண்டு இருப்பீர்கள்.

3 மற்றும் 6 ஆம் இடங்களில் ராகு- கேது இட அமர்வு செய்துள்ளது. ராகு- கேது உங்களுக்கு நடுநிலைத் தன்மை வாய்ந்த கிரகங்களாகச் செயலாற்றும்.

தொழில்ரீதியான மற்றும் வேலைரீதியான முயற்சிகளில் சனி பகவான் ஏற்படுத்தும் தடைகளில் இருந்து விடுபட குரு பகவான் உங்களுக்குத் துணை நிற்பார்.

பொருளாதாரரீதியான கஷ்டங்களைத் துடைப்பார் குரு பகவான். இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருபவராக குரு பகவான் இருப்பார்.

தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் நிலையற்ற தன்மையினை உணர்ந்து இருப்பீர்கள்; ஆனால் குரு பெயர்ச்சிக்குப் பின் தொழில் மற்றும் வேலையில் ஆகச் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள்.

மூத்த சகோதரர்களால் உங்களுக்குத் தக்க உதவிகள் கிடைக்கப் பெறும். குரு பகவானின் பார்வை 3, 5 மற்றும் 7 ஆம் இடங்களில் விழுகின்றது.

திருமண காரியங்களில் சனி பகவான் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்; இதனால் பலரும் திருமணம் சார்ந்து வெறுப்பு மனநிலைக்கே வந்து இருப்பர். குரு பெயர்ச்சிக்குப் பின் உங்கள் மனநிலையில் மாற்றம் காணப்படும்.

குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து வரை செல்ல இருந்தநிலையில் குரு பெயர்ச்சிக்குப் பின் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்வர்.

உங்கள் வாழ்க்கைத் துணை மீதான புரிதல் அதிகரித்துக் காணப்படுவீர்கள். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

மேலும் குரு பெயர்ச்சி காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனி பகவான் ஏற்படுத்தும் ஒவ்வொரு தடையினையும் குரு பகவான் முறியடிப்பார்.