மகரம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

மகர ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

சுப காரியங்களில் இதுநாள் வரை இழுபறி, தடைகளைச் சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் காலங்களில் சுப காரியங்களில் இருந்துவந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறையும்.

பிள்ளைகளுடன் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்; வயிறு சார்ந்த பிரச்சினைகள், சைனஸ் பிரச்சினைகள், ஒற்றைத் தலைவலி போன்றவைகள் ஏற்படும்.

பைரவர் வழிபாடு வாழ்க்கையில் நன்மையினை ஏற்படுத்தும். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தோருக்கு நற் செய்தி தேடி வரும்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். வியாபாரம், தொழில், வேலையில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.  லாபத்தின் அளவு அதிகரிக்கும் காலகட்டமாகும்.

வீடு வாங்குதல், மனை வாங்குதல், விவசாய நிலம் வாங்குதல் என பிறர் பொறாமைப்படும் அளவில் உங்கள் வாழ்க்கை இருக்கும்.

பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

தனிப்பட்ட முறையில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும், தொட்டது துலங்கும் காலம் என்றே 2024 ஆம் ஆண்டினைச் சொல்லலாம்.

திடீர் அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியால் நிரப்பும். எதிர்பாராத யோகப் பலன்களைப் பெறுவீர்கள்.

வெளியூரில் உங்களின் தொழிலை நீங்கள் விரிவுபடுத்துவீர்கள்; அடிமைத் தொழில் செய்துவந்த பலரும் சுய தொழில் துவங்கி அதில் செல்வாக்குடன் திகழ்வர். கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து தனித் தொழிலாக உங்களுடைய பெயரில் செய்து வெற்றி காண்பீர்கள்.

இல்லத்தரசிகள் தங்கநகைகள் வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர்.