தனுசு புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

தனுசு ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

சுப காரியங்களில் இருந்த தடைகள் சட்டென்று பனி போல் விலகிப் போகும். நீண்ட காலங்கள் கழித்து உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருகை புரிவர். மேலும் நீங்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்குச் சென்று வருவீர்கள்.

குருவாயூர் சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்து வாருங்கள்; துலாபாரம் செய்வது கூடுதல் சிறப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் கால் முட்டு முதல் பாதம் வரையிலான உடல் பாகங்களில் உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு சிறு அளவிலான நடைபயிற்சிகள் கட்டாயம் செய்யவும்.

சிறு தொந்தரவுகளைச் சரிவர கவனிக்காவிட்டால் பெரிய அளவில் வீண் விரயச் செலவுகளுக்கு இட்டுச் செல்லும். தொழிலில் எதிர்பார்ப்பதுபோல் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.

தொழில்ரீதியாக புதுத் தொழில் துவங்கவோ அல்லது இருக்கும் தொழிலை பெரிய அளவில் அபிவிருத்தி செய்யவோ செய்வீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும்.

அதேபோல் வேலை என்று எடுத்துக் கொண்டால் இதுவரை தள்ளிப் போன சம்பள உயர்வு, பதவி உயர்வு உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.

எதிர்பார்த்த இடங்களில் கடனுதவிகள் கிடைக்கப் பெறும்; பழைய நெருக்கடி தரும் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சித்திரை மாதத்திற்குப் பின் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நற் செய்தி கிடைக்கும், வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீரத் தீர மனதில் இருந்த கவலைகள் குறையும்.

செல்வாக்கு உயரக்கூடிய கால்கட்டத்தினைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலீடுகளை அதிக அளவில் செய்வீர்கள்.