கும்ப ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.
சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.
விநாயகர் வழிபாடு, கேது பகவான் வழிபாடு உங்களுக்கு வரவிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுவிப்பதாக இருக்கும்.
தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த பகைமை சரியாகும். தொற்றுநோய்ப் பிரச்சினைகள் ஏற்படும். ஜென்ம சனியில் இருப்பதால் உடல் முழு பரிசோதனை செய்வது அவசியம்.
சோம்பல் அதிகரிக்கும்; உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடன்களை சரிவர அடைத்துவிடுங்கள்; இல்லையேல் அவமானம் ஏற்பட நேரிடும்.
நண்பர்களுடன் சேர்ந்து அபாயகரமான முதலீடுகள் எதையும் செய்துவிடாதீர்கள்; நிச்சயம் பண இழப்பினைச் சந்திப்பீர்கள். முதலீடு செய்ய நினைப்போர் மிகவும் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்.
தொழில் மற்றும் வேலையில் குருவின் பார்வையில் ஏற்றம் இருக்கும், இதுவரை தொழிலில் பெரிய அளவில் சறுக்கல்களைச் சந்தித்து இருப்பீர்கள். தன்னம்பிக்கை குறைந்தவராக உணர்ந்து இருப்பீர்கள்.
இனி தொழிலில் நஷ்டத்தில் இருந்து மீண்டு, தன்னம்பிக்கையுடன் மீண்டும் மறு களம் காணத் தயார் ஆவீர்கள். வேலைவாய்ப்பு என்று கொண்டால் பல ஆண்டுகளாக திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வந்தோருக்கும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கப் பெறும்.
எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நற் செய்தி வந்து சேரும், திருமண காரியங்கள் இதுவரை இழுபறியிலேயே இருந்திருக்கும். இனி பாதிப்புகள் சிறிது சிறிதாக குறையத் துவங்கும்.
கடன் வாங்கிப் பணத்தினைச் செலவு செய்வீர்கள்; ஆனால் முடிந்தளவு அதனை வீண் விரயச் செலவுகளாக அல்லாமல் சுபச் செலவுகளாகச் செய்து விடுங்கள்.