கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். கும்ப ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் வீட்டில் இருந்து 4 ஆம் வீட்டிற்குப் பெயர்கிறார்.

பொதுவாக குரு பகவான் 2,5,7,9 ஆகிய இடங்களில் அமர்வு செய்வது அம்சத்தினைக் கொடுக்கும். 4 ஆம் இடத்தில் அமர்வு செய்வது நடுநிலையான பலனைக் கொடுப்பதாய் இருக்கும்.

குரு பகவான் 8 ஆம் வீடான கன்னி வீட்டின் மீது பார்வையினைப் பதிப்பதால் நெருக்கடியான மனநிலையில் இருந்து மீள்வீர்கள்.

கடந்த காலத்தில் சந்தித்த வேலைசார்ந்த நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த நெருக்கடி போன்றவைகளில் இருந்து விடுபட ஆதரவு கிடைக்கப் பெறும்.

குரு பகவானின் பார்வை 10 ஆம் இடத்தில் விழுவதால் வேலை, தொழில் ரீதியாக சிறிதளவிலான முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் காண்பீர்கள்.

நீண்ட காலமாக வாகனரீதியாகச் செலவினங்களைச் செய்துவந்த நிலையில் வாகனங்களை மாற்றும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். மேலும் வீட்டினை மாற்றச் செய்வீர்கள்.

தொழில்ரீதியாக கூட்டுத் தொழில் செய்யத் திட்டமிட்டு இருப்போர் கட்டாயம் தனித் தொழிலாக மட்டுமே செய்யவும், மேலும் புது முதலீடுகளைப் பெரிய அளவில் செய்யாமல் மிகச் சிறிய அளவிலேயே செய்யுங்கள்; இல்லையேல் பெரிய நஷ்டத்திற்கு இது இட்டுச் செல்லும்.

சனி பகவான் ஜென்மத்தில் இருப்பதால் ஏற்கனவே மனதளவில் மிகுந்த குழப்ப நிலையில் காணப்படுவீர்கள்; குரு பகவான் குடும்ப வாழ்க்கையினைத் தவிர வேலை, பணம், தொழில் போன்ற விஷயங்களில் சிறு அடியினை முன்னோக்கி வைக்கத் துணை நிற்கிறார்.

மேலும் கேது பகவான் ஏற்படுத்தும் தடைகளைத் தவிடு பொடியாக்கவும் குரு பகவான் துணை புரிகிறார். மிகப் பெரும் ஆதாயத்தினையும், மகிழ்ச்சியினையும் குரு பகவான் கொடுக்கவில்லை என்றாலும், உங்களை நெருக்கடிகளில் இருந்து மீள சிறு சிறு வழிகளைக் காட்டுவார்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.