மகரம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். மகர ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியில் குரு பகவானின் பார்வை உங்கள் மேல் விழுகின்றது.

பல ஆண்டுகளாக நல்ல காலத்தினை நோக்கிக் காத்திருந்த நீங்கள் தற்போது சனிப் பெயர்ச்சி காலத்தில் இருந்து விடுபடக் காத்திருக்கும் வேளையில் குரு பகவானின் பார்வையில் இருப்பதால் ஆதாயங்கள் நிறைந்த காலகட்டமாக இந்த குரு பெயர்ச்சியானது இருக்கும்.

உங்களின் புத்தி, சிந்தனையில் புத்துணர்ச்சியினை குரு பகவான் கொடுப்பார். வாய்ப்புகளுக்காக நீங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தற்போது உங்களைத் தேடி வாய்ப்புகள் வரும்.

இட மாற்றம், பதவி மாற்றம் போன்ற விஷயங்களில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். பொருளாதார ரீதியிலான ஏற்றங்களையும், தொழில்ரீதியான ஆகச் சிறந்த மாற்றங்களையும் கண்டு மகிழ்வீர்கள்.

ஏழரைச் சனி காலத்தில் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்களைப் பார்த்து இருப்பீர்கள். தேவையில்லாத சண்டைகளை ஏற்படுத்திவிட்டதாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவீர்கள்.

தற்போது உறவுகளிடம் நீங்களே இறங்கிப் போய் சமாதானத்திற்கு ஆளாவீர்கள். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நிச்சயம் நற் செய்தி கிடைக்கப் பெறும்.

9 ஆம் இடத்தில் குரு பகவானின் பார்வை விழுவதால் நேர்ந்த அவப் பெயரினைத் துடைத்துப் புகழினைப் பெறுவீர்கள். பாராட்டுகளால் பலரின் ஏளனப் பேச்சுகளை எதிர்கொள்வீர்கள்.

மேலும் 11 ஆம் இடத்தில் விழும் குரு பகவானின் பார்வையால் லாபத்தினைப் பெறுவீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மனநிலையானது குழப்பத்துடனும் எதிர்மறைச் சிந்தனையுடனும் இருந்துவந்த நிலையில் தற்போது புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மேலும் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். மற்ற கிரகங்களும் உங்களுக்குச் சாதகமாக மாறிவரும் நிலையில் குரு பகவானும் உங்களுக்குப் பெரும் துணையாக நிற்பார்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.