2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். சிம்ம ராசி அன்பர்களே குரு பகவான் 10 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து இட அமர்வு செய்கிறார்.
10-ல் குரு வந்தால் பதவி பறி போகும் என்ற பழமொழியே உண்டு, பதவி பறிபோகும் என்பதை இருக்கும் வேலையில் இருந்து பதவி உயர்வு, வேலை பறிபோதல் என்று எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
6 ஆம் இடத்தில் சனி பகவான் கண்டகச் சனியாக உள்ளார். 6 மற்றும் 8 ஆம் இடங்களில் ராகு- கேது இட அமர்வு செய்துள்ளது.
வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்; அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும். இதனால் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்துவிடுங்கள்.
சிம்ம ராசிக்கு 2, 4 மற்றும் 6 ஆம் இடங்களில் குரு பார்வையானது விழுகின்றது. 2 ஆம் இடத்தில் இருக்கும் கேது பகவான் குடும்ப வாழ்க்கை, பணம், உடல் நலம் என அனைத்து வகைகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.
கேது பகவான் ஏற்படுத்தும் பிரச்சினைகளில் இருந்து விடுபட குரு பகவான் உங்களுக்குத் துணை நிற்பார்.
4 ஆம் இடத்து குரு பார்வையால் வாகனம், வீடு போன்றவற்றில் இருக்கும் பழுதுகளைச் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
6 ஆம் இடத்து குரு பார்வையால் கடன்கள், எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து மீளலாம்.
நாம் யார் என்பதை இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் குரு பகவான் நமக்குச் சிறப்பாக உணர்த்துவார். குரு பகவான் பெரிய அளவில் நன்மைகளைச் செய்யாவிட்டாலும் தீமைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுபவராக இருப்பார்.
குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.