மீன ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.
சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.
பெருமாளுடன் மகாலட்சுமி அருள்பாலிக்கும் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் சென்று வழிபாடு செய்து வாருங்கள். அலமேலுத் தாயார் வழிபாடு, சக்கரத் தாழ்வார் தரிசனம் மிக முக்கியம்.
ஜென்மத்தில் ராகு பகவான் இருப்பதால் மிகக் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் கணவன்- மனைவி இடையே பெரும் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்து நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை ராகு பகவானால் எதிர்பார்த்ததுபோல் திருமண வரன் அமையப் பெறும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும்.
வேலைவாய்ப்பு ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த இட மாற்றம், பதவி மாற்றம் போன்ற விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.
எதிர்பார்க்காத இடங்களில் இருந்து மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையிலான விஷயங்கள் நடக்கும். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஏழரைச் சனியின் பிடியில் இருப்பதால் மனதினை ஒருநிலைப் படுத்தும் முயற்சி செய்வது கட்டாயம்; இல்லையேல் மன அழுத்தம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராகு பகவான் ஏற்படுத்தும் மன அழுத்தம் உடல் தொந்தரவுகளாக மாற வாய்ப்புள்ளது. திடீர் ராஜயோகம் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். அமைதியான முறையில் பங்குதாரர்களுடன் பிரச்சினைகளைக் கையாள்தல் அவசியம்.
பலரும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.