முகத்தில் அதிகம் எண்ணெய் வழிகிறதா? இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்…!

மனிதர்களுக்கு சருமம் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சருமம் வேறுபாடு அடைந்து காணப்படுகிறது. சிலருக்கு எண்ணெய் சருமமாகவும், சிலருக்கு வறண்ட சருமமாகவும், சிலருக்கு உணர்திறன் அதிகம் கொண்ட சருமமாகவும் இப்படி பல்வேறு விதங்களில் இருக்கிறது. இதில் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான சிக்கல் என்றால் முகம் எப்பொழுதும் பளிச்சென்று தோற்றம் அளிக்காமல் சற்று எண்ணெய் வழிந்தது போலவே இருக்கும். இதற்காக அவர்கள் கவலைப்பட வேண்டாம் சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் போதும் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

1. ஒரு நாளைக்கு இருமுறை முகம் கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்த பிறகு, அதிகமாக வேலை செய்த பிறகு உங்கள் முகத்தை நன்றாக கழுவுங்கள். சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை ஒரு நாளில் இருமுறை கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. எண்ணெய் சத்துக் கொண்ட சருமத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட பேஸ்வாஷ் என்று கூறப்படும் சில ஃபேஸ்வாஸ்கள் உங்கள் முகத்தை வறட்சி ஆக்கிவிடும். இதனால் அளவுக்கு அதிகமாக எண்ணெய் உற்பத்தியாக நேரிடும். எனவே மிதமான ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துங்கள்.

3. முகம் கழுவும் பொழுது எண்ணெய் சத்தை நீக்குவதாக நினைத்த கடினமாக ஸ்கரப் செய்யக்கூடாது. மிகவும் அழுத்தி சருமத்தை பாதிக்கும் வகையில் ஸ்கரப் செய்தல் நல்லதல்ல. இதனால் எண்ணெய் உற்பத்தி அதிகமாகும் தவிர குறைய வாய்ப்பில்லை.

4. சருமத்திற்கு இதம் அளிக்கக்கூடிய டோனர் பயன்படுத்துங்கள். அதேபோல் சருமத்திற்கு மாய்ச்சரைசர் மிகவும் முக்கியம். மேலும் எப்பொழுதும் சன் ஸ்கிரீன் போட மறந்து விடாதீர்கள். சன் ஸ்கிரீன் இருக்கும்படியான மேட் பினிஷ் உள்ள மாய்ஸ்ரைசரை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

5. அதிகமாக தண்ணீர் பருகுங்கள் முகத்திற்கு வெளிப்புறம் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருத்தல் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சருமத்தை உள்ளிருந்தும் நீரேற்றத்துடன் வைத்திருத்தல் அவசியம். இதற்கு அதிகமாக நீரை பருகுதல் மிகவும் அவசியமானது.