பிறந்த குழந்தைகளின் துணிகளை துவைக்கும் பொழுது இதையெல்லாம் கவனிக்க தவறி விடாதீர்கள்!

குழந்தைகளின் சருமம் பெரியவர்களின் சருமத்தை விட மிக மிக மென்மையானது. எளிதில் நோய் தொற்று, அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவர்களின் படுக்கைகள், உடைகள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் சுகாதாரமாக வைத்திருத்தல் மிக மிக முக்கியம். இப்பொழுதுதான் முதன்முறை பெற்றோர் ஆகப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு அந்த குழந்தைகளை எப்படி கையாள்வது என்பதில் ஏராளமான குழப்பம் இருக்கலாம்.

குறிப்பாக அந்த குழந்தைகளின் துணிகளை எப்படி துவைப்பது என்பது குறித்த அச்சம் இருக்கலாம். காரணம் குழந்தைகளுக்கான சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜி, தொற்று ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பதே அந்த குழந்தைகளின் உடைகளை நாம் முறையாக பராமரிக்காமல் இருப்பது தான். இனி உங்கள் குழந்தைகளின் துணிகளை துவைக்கும் பொழுது இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்க.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்!

1. குழந்தைகளின் துணிகளை எப்பொழுதும் பெரியவர்களின் துணிகளோடு சேர்த்து துவைக்காதீர்கள். குழந்தைகளின் துணிகளை மட்டும் தனியாக துவையுங்கள்.

2. குழந்தைகளின் உடைகளுடன் துணி டயாப்பர்களை சேர்த்து துவைக்க வேண்டாம். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே எப்பொழுதும் தனியாக துவையுங்கள்.

3. அதிக வாசம் நிறைந்த டிடர்ஜெண்டுகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் வாசத்திற்காக ஏதும் திரவங்கள் அதிகம் சேர்க்கக்கூடாது. இந்த வாசனை குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

4. குழந்தைகளுக்கான டிடர்ஜென்ட் பவுடர் அல்லது சோப்பு தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் உள்ள கெமிக்கல்களின் அளவை கவனத்தில் கொள்ளுங்கள். அதிகமாக ப்ளீச் மற்றும் கெமிக்கல் நிறைந்த டிடர்ஜென்ட் பவுடர் அல்லது சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

5. வழக்கமாக நாம் பயன்படுத்தக்கூடிய ஆடைகளை அலசுவதை விட சற்று கூடுதலாக தண்ணீர் விட்டு குழந்தைகளின் துணிகளை அலசுதல் மிகவும் அவசியம்.

6. குழந்தைகளின் துணிகளை கைகளால் துவைக்காமல் வாஷிங் மெஷினில் துவைக்கிறீர்கள் என்றால் ட்ரையரை பயன்படுத்த வேண்டாம்.

7. குழந்தைகளின் துணிகளை காற்றோட்டமாக சூரிய ஒளி படும்படி எப்பொழுதும் காயவைத்து எடுப்பது மிகவும் சிறந்தது.

8. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு புதிய உடையை பயன்படுத்தினாலும் கூட ஒரு முறை அதனை நன்றாக அலசி காயவைத்து அதன் பிறகு பயன்படுத்துவது நல்லது.

9. அதிக அளவு கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி குழந்தைகளின் துணிகளை அலசக்கூடாது. இது துணிகளை பாழாக்கி விடும்.

10. குழந்தைகளின் உடைகளின் விலை பட்டியலில் அதை எவ்வாறு துவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சில துணிகளுக்கு மெஷின் வாஷ் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வாறு செய்ய வேண்டாம். உடைகளில் குறிப்பிடப்பட்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்.