தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா??? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்…!

பருவ நிலையில் மாற்றம் வந்துவிட்டால் தொண்டை வலி என்பது பலருக்கும் உண்டாக கூடிய ஒன்றாகும். இந்த தொண்டை வலி தொற்றின் காரணமாக கூட ஏற்படலாம். உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க, ஏன் எச்சில் விழுங்க கூட நமக்கு சிரமமாக இருக்கும். இந்த தொண்டை வலிக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது சிறந்தது என்றாலும் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பார்த்தால் ஆரம்பத்திலேயே இந்த தொண்டை வலியை குறைத்திட முடியும். வாருங்கள் தொண்டை வலியை சரி செய்யக்கூடிய சில வைத்திய முறைகளை பார்க்கலாம்.

1. தேன்:

தேன் தொண்டை வலியை சரி செய்வதில் மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. தேனை டீயில் கலக்கியோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

தேனில் உள்ள டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் எனும் மூலக்கூறு தொண்டை வலியை சரி செய்திட மிகவும் துணை புரிகிறது.

2. வெந்நீர் மற்றும் உப்பு :

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த உப்பு தண்ணீரை தொண்டையில் படும் படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். தொண்டையில் உள்ள தொற்றுக்கள் அனைத்தும் சரியாகி வலி குறைந்து விடும்.

3. பேக்கிங் சோடா:

ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அழிந்து தொண்டை வலி குறைந்து விடும். தேசிய புற்றுநோய் மையம் இந்த முறையை பரிந்துரை செய்கிறது.

4. பூண்டு:

பூண்டு இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் தன்மை நிறைந்து இருக்கிறது. எனவே இந்த பூண்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் தொண்டையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து தொண்டை வலி குணமாகிறது. பூண்டை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது பொடி செய்து வைத்தும் தினமும் சாப்பிட்டு வரலாம்.

5. ஆவி பிடித்தல்:

தொண்டை வலியை சரி செய்ய தொண்டை சற்று ஈரப்பதமாக இருத்தல் அவசியம். இதற்கு நல்ல சூடான தண்ணீரை கொண்டு ஆவி பிடிக்கலாம். மூக்கு மற்றும் வாயின் வழியாக அந்த நீர் ஆவி உள்ளே செல்லும்படி ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டை வலி சரி செய்யலாம். பத்திலிருந்து 15 நிமிடங்கள் இதுபோல் ஆவி பிடித்து வந்தால் நிச்சயம் தொண்டை வலி மாறும்.