நம்முடைய சருமத்தில் பல்வேறு காரணங்களுக்காக சில இடங்கள் மட்டும் அதிக அளவில் கருமை நிறமாக இருக்கும். அதிலும் குறிப்பாக முகத்தில் உதட்டை சுற்றிலும் பலருக்கு கருமை நிறமாக தெரியும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், மருந்துகள் என பல காரணங்கள் இருக்கலாம். சரி இந்த கருமையை சரி செய்யவே முடியாதா என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு இந்த கருமையை எளிமையாக சரி செய்திட அருமையான சில டிப்ஸ்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
1. எலுமிச்சை:
- எலுமிச்சை பழத்தை இரண்டு பாதியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதில் ஒரு பாதியை உதட்டை சுற்றிலும் மென்மையாக தேய்க்க வேண்டும்.
- இதனை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடலாம்.
- 15 நிமிடங்களுக்குப் பிறகு இதனை தண்ணீரைக் கொண்டு அலசி விடவும்.
- மூன்று நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வர கருமை நிறம் மறையும்.
இந்த ஆயுர்வேத நெய் கிரிமால் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா???
2. ஓட்ஸ் :
- ஒரு பௌலில் சிறிதளவு ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் ஆயில் சேர்த்து இதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
- இப்பொழுது இதனை ஸ்க்ரப் போல உதட்டை சுற்றிலும் நன்றாக தேய்க்க வேண்டும்.
- குளிர்ந்த நீரினால் சில நிமிடத்திற்கு பிறகு இதனை கழுவி விடலாம்.
- இதனை தினமும் செய்து வந்தால் உதட்டை சுற்றிலும் உள்ள கருமை குறைந்து விடும்.
3. பப்பாளி:
- ஒரு சிறிய துண்டு பப்பாளியை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- கலந்து வைத்த பப்பாளி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்கை உதட்டை சுற்றிலும் தடவி விட வேண்டும்.
- 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.
- வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு இதனை கழுவிவிடலாம்.
- வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வந்தால் கருமை மறைந்து விடும்.
4. உருளைக்கிழங்கு:
- உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதனை அரைத்து சாறை எடுத்துக் கொள்ளவும்.
- இந்த உருளைக்கிழங்கு சாறை உதட்டை சுற்றிலும் மசாஜ் போல செய்ய வேண்டும்.
- 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இதனை கழுவி விடலாம்.
- தினந்தோறும் இவ்வாறு செய்து வந்தால் கருமையை முற்றிலும் ஒழிக்கலாம்.
5. மஞ்சள் :
- இரண்டு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளவும்.
- இதனை ஒரு பேக் போல செய்து உதட்டை சுற்றிலும் தடவி விடவும்.
- 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- இப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரால் இதனை கழுவி விடலாம்.
- இந்த பேக் தினந்தோறும் போட்டு வந்தால் கருமை நிறம் முற்றிலுமாக மாறிவிடும்.