பிப்ரவரி மாதம் வந்து விட்டாலே அது காதலர்களின் மாதமாக கருதப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் உள்ள காதலர்களால் காதலர் தினமாக கருதப்படுகிறது. அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளை ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வகையில் கொண்டாடி வருகிறார்கள். விருப்பமானவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், பிடித்தவர்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுதல் என பலரும் கொண்டாடி வரும் இந்த நாளில் அணிந்திருக்கும் உடைக்கும் அவர்களின் எண்ணத்திற்கு சம்பந்தம் இருக்கிறது என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வண்ண உடைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளதாக கருதப்படுகிறது.
1. சிவப்பு நிறம்:
சிவப்பு நிறம் காதலர்களின் நிறமாக கருதப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே காதலில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் துணையுடன் சேர்ந்து சிவப்பு நிற உடையுடன் வலம் வரலாம்.
2. பிங்க் நிறம்:
உங்களிடம் ஒருவர் காதலை முன்மொழிந்து அதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் பிங்க் நிறத்தின் மூலம் அதனை வெளிப்படுத்தலாம். நீங்கள் காதலை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை அழகான பிங்க் நிற உடையில் வெளிப்படுத்தி மகிழுங்கள்.
3. கருப்பு நிறம்:
கருப்பு நிறம் என்பது காதலை ஏற்கவில்லை என்பதை தெரிவிக்கும் நிறமாக கருதப்படுகிறது. பொதுவாகவே கருப்பு நிறம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். உங்களிடம் ஒருவர் காதலை முன்மொழிந்து அதை நீங்கள் ஏற்கவில்லை என்பதை அவர்களை காயப்படுத்தாமல் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் கருப்பு நிற உடையின் மூலம் தெரிவிக்கலாம்.
4. மஞ்சள் நிறம்:
மஞ்சள் நிற உடை உங்களுக்கு காதல் முறிவு என்பதை வெளிக்காட்டும் நிறம் ஆகும். காதல் முறிவு என்பது கடினமான ஒன்றுதான் யாருமே இந்த நிலையை கடக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். ஆனால் தவறான துணையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வு காதல் முறிவு தான். சமீபத்தில் தான் உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்றால் அதனை மஞ்சள் நிற உடையின் மூலம் நீங்கள் வெளிக் காட்டலாமாம்.
5. ஆரஞ்சு நிறம்:
நீங்கள் உங்கள் காதலை உங்களுக்கு பிடித்தவர்களிடம் வெளிப்படுத்த போகிறீர்கள் என்றால் ஆரஞ்சு நிற உடையில் செல்லலாம். இந்த நிறம் நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே உங்கள் பிடித்தமானவருக்கு தெரிவித்து விடும்.
6. நீல நிறம்:
காதலை முன்மொழிந்தால் அதை ஏற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் நிறம் நீல நிறம். ஒருவேளை உங்களுக்கு காதலில் ஈடுபாடு இல்லை என்றால் அந்த நிறத்தை அன்றைய தினத்தன்று நீங்கள் தவிர்த்து விடலாம்.
7. பச்சை நிறம்:
பச்சை நிறம் நீங்கள் உங்களுடைய காதலை உங்களுக்குப் பிடித்தவரிடம் வெளிப்படுத்திவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால் பச்சை நிறத்தை அணிந்து அதனை வெளிப்படுத்தலாம். அவர்களிடம் பதிலை கேட்டு நீங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று நினைத்தால் உங்கள் உடையின் மூலம் வெளிப்படுத்தலாம்.
8. வெள்ளை நிறம்:
உங்களுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றால் இந்த வெள்ளை நிற உடைகளை அணியலாம். விரைவில் உங்கள் திருமணம் நடைபெற இருக்கிறது என்பதை நீங்களும் உங்கள் துணையும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து அதனை வெளிப்படுத்தலாம்.
9. ஊதா அல்லது சாம்பல் நிறம்:
உங்களுக்கு காதலில் ஈடுபாடு இல்லை என்றால் நீங்கள் ஊதா நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் உடை அணிந்து தெரிவிக்கலாம். அனைவருக்கும் காதல் வாழ்க்கை பிடித்திருக்கும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு தற்போது காதலை ஈடுபட விருப்பமில்லை என்றால் இந்த நிறங்களில் உடை அணிந்து அதனை வெளிப்படுத்தலாம்.