இந்த ஆயுர்வேத நெய் கிரிமால் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா???

நம்முடைய உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு நமது தோல் தான். தோல் நமக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு காரணியாக செயல்படுகிறது இந்த தோலை முறையாக பராமரித்தல் என்பது மிகவும் அவசியம். சரும பராமரிப்பு என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. ஆரோக்கியத்திற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சருமத்தை ஆரோக்கியமாக நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு பலரும் ரசாயனங்கள் அடங்கிய கிரிம்களையும், முகப்பூச்சுக்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஆயுர்வேத முறைப்படி செய்யப்படும் நெய் மாய்ஸ்ரைசர் பலரிடமும் பிரபலமடைந்த வருகிறது.

இந்த மாய்ஸ்ரைசர் உண்மையிலேயே சருமத்திற்கு நல்லதா? இது அழகு சாதன பொருளா இல்லை சரும ஆரோக்கியத்திலும் நன்மை தருகிறதா? இந்த கிரீமை பயன்படுத்துவதால் சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இப்படி உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் இருக்கலாம் இந்த கிரிமால் என்னென்ன நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

முகம் தங்கம் போல் ஜொலித்திட நூறு முறை நெய்யை கழுவ வேண்டுமா?

1. இந்த ஆயுர்வேத கிரீம் சருமத்தின் ஆழம் வரை சென்று சருமத்தை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. பொதுவாக நம்முடைய சருமத்தில் ஏழு அடுக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிரீம் சருமத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் சென்று உள்ளிருந்து நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. மேலும் சருமத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் ஊட்டத்தை அளிக்கிறது.

2. இந்த கிரீமில் ஒமேகா 3, 9 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் ஏ, டி, கே, இ ஆகியன நிறைந்து இருக்கிறது. எனவே சருமத்தை பளிச்சென்று வைத்திருத்தல், நீரேற்றத்துடன் வைத்திருத்தல், சுருக்கங்கள் இன்றி பாதுகாத்தல், முதுமை அடையாமல் சருமத்தை என்றும் இளமையுடன் வைத்திருத்தல் ஆகிய பல்வேறு நன்மைகளை தருகிறது.

3. இந்த கிரீம் பகல் மற்றும் இரவு நேரத்திற்கு உகந்த கிரீம் ஆக கருதப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க இயற்கையான ஒரு கிரீம் ஆகும். இயற்கையான இந்த சன் ஸ்கிரீன் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து நம்முடைய சருமத்தை பல மணி நேரங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும்.

4. கண்களைச் சுற்றி சிலருக்கு கருவளையம் அதிகம் இருக்கும். என்னதான் கிரீம் உபயோகித்தாலும், வைத்தியங்கள் பார்த்தாலும் இந்த கருவளையம் குறையவில்லை என்றால் இந்த ஆயுர்வேத கிரிமை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் கருவளையத்தை இது வெகுவாக குறைத்து விடும்.

5. சருமத்தை பொலிவு பெற செய்வது மட்டும் இல்லாமல் சருமத்தில் உள்ள காயங்கள், தீப்புண், தழும்புகள் என அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை இது நீக்கும். காயம் பட்ட இடங்களில் புதிய செல்களை உருவாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.