உணவில் இந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்!

உலகளவில் தயார் செய்யப்படும் அனைத்து விதமான உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள். காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகையாகும். நார்ச்சத்து, வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான ஆற்றல்கள் நிறைந்த காய்கறிகளின் மகத்துவத்தை தற்போது உலகெங்கும் உணர்ந்து அதை உணவில் அதிகம் சேர்க்க தொடங்கி வருகிறார்கள். அப்படி உங்கள் உணவில் அதிகம் நீங்கள் சேர்க்க வேண்டிய சில காய்கறிகளை பற்றி பார்க்கலாம்.

அதிகளவு இயர் போன் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

1. கேரட்:

கேரட் அதிகளவு விட்டமின் ஏ நிறைந்து உள்ள ஒரு உணவு பொருளாகும். விட்டமின் ஏ, பொட்டாசியம், மற்றும் விட்டமின் சி என அனைத்து சத்துக்களும் நிறைந்த இந்த கேரட்டை நாம் தினசரி எடுத்துக் கொண்டால் புற்றுநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். வாரத்திற்கு இரண்டிலிருந்து நான்கு கேரட் எடுத்துக் கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயினால் வரும் ஆபத்துக்கள் குறைவு. அதேபோல் கேரட் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயிலிருந்து உண்டாகும் ஆபத்துகளும் குறைவாகவே இருக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது.

2. கீரை:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு உணவு பொருள் கீரை. கீரை மிகக் குறைந்த அளவிலான கலோரிகளை உடையது. அதே சமயம் அதிக அளவு விட்டமின்கள் நிறைந்து இருக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே நிறைந்த இந்த கீரையை தினமும் சாப்பிட இதய ஆரோக்கியம் முன்னேற்றம் அடைகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

3. பூண்டு:

பூண்டு மருத்துவ தன்மை நிறைந்த ஒரு காய் வகை ஆகும். பூண்டில் உள்ள அல்லிசின் எனும் மூலக்கூறு புற்றுநோயை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றல் உடையது. மேலும் பூண்டை தினமும் பொடி செய்து சாப்பிடுபவர்களுக்கு இதய ஆரோக்கியம் பலம் அடைவதாகவும், டைப் 2 சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் ஆற்றல் இந்த பூண்டிற்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். மேலும் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க இந்த பூண்டு உதவுகிறது. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் இந்த பூண்டு உதவுகிறது.

4. பீட்ரூட்:

பார்க்கும் பொழுதே கண்களை கவரக்கூடிய நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் ஃபோலேட் நிறைந்ததாகவும் பீட்ரூட் இருக்கிறது. அதுமட்டுமின்றி குறைவான கலோரிகளுடன் மெக்னீசியம் நிறைந்து இருக்கும் இந்த பீட்ரூட்டை அடிக்கடி பீட்ரூட் சாறாக பருகி வந்தால் நல்ல உடல் ஆற்றல் அதிகரிக்கும். பீட்ரூட் வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துக்களை பெற முடியும்.

5. காலிஃப்ளவர்:

காலிபிளவரில் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் கே நிறைந்ததாக இருக்கிறது. அரிசி உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கு மாற்றாக கார்போஹைட்ரேட்டில் குறைந்தும் குறைவான கலோரிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. சத்துக்கள் நிறைந்து நாம் வயிற்றை நிறைவாகவும் வைத்திருக்கக் கூடிய உணவுப் பொருளாக இந்த காலிபிளவர் உள்ளது.