என்ன மன அழுத்தமா? இதோ மன அழுத்தத்தை குறைத்திடும் சில எளிய வழிமுறைகள்…!

சமீப காலமாக அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான வார்த்தையாக இந்த ஸ்ட்ரெஸ் என்பது உள்ளது. அதிக வேலைப்பளு, குடும்ப பிரச்சனைகள், உடல் நல பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள் என பல்வேறு காரணங்களுக்காக இந்த மன அழுத்த பிரச்சனைக்கு பலரும் உள்ளாகிறார்கள். சிலர் என்ன காரணம் என்று தெரியாமலேயே கூட மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இந்த மன அழுத்தத்தை போக்க நல்ல மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று தீர்வு காணுதல் நல்லது. இதன் ஆரம்ப நிலையில் இருந்தால் இது போன்ற சில எளிய வகைகளை நீங்கள் கையாளலாம். இது உங்கள் மன அமைதியை அதிகரித்து மன அழுத்தத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை தரும்.

1. உடல் செயல்பாடுகள்:

மன அழுத்தத்தை நீக்க ஒரு எளிய வழி உங்களை அதிக அளவிலான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வது. ஜிம் செல்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது, நடனங்கள் கற்றுக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்கலாம்.

மொபைல் போனை கீழேயே வைப்பதில்லையா? கண்டிப்பாக நோமோபோபியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

2. ஆரோக்கியமான உணவு முறை:

உணவு என்பது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மனநலத்தையும் சார்ந்து இருக்கிறது. எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றினால் மன அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பாக மாங்கனிஸ் மற்றும் விட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நலம். காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், மீன், நட்ஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. திரை நேரத்தை குறையுங்கள்:

ஸ்மார்ட்போன், கணினி, தொலைக்காட்சி என அதிக நேரம் திரையில் மூழ்கி இருப்பதும் தூக்கத்தை பாதிக்கலாம். தூக்கம் குறையும் பொழுது நமக்கு மன அமைதி குறைந்து மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே தூக்கத்தை பாதிக்கக்கூடிய இந்த திரை நேரத்தை கூடுமானவரை குறைக்க வேண்டும். குறிப்பாக தூங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக எந்த திரை நேரத்திலும் ஈடுபட வேண்டாம்.

4. சுய கவனம்:

பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. அன்றாட வேலைப்பளுவுக்கு இடையிலேயே தங்களுக்காக நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் தங்களின் மீது அக்கறை செலுத்த தொடங்கினால் மன அழுத்தம் குறையும். சரும பராமரிப்பு செய்வது, தலைக்கு மசாஜ் செய்வது, எழுதுவது போல பிடித்தமான செயல்களில் ஈடுபடலாம்.

5. காபியை குறைத்தல்;

கஃபைன் மூலப்பொருள் நிறைந்த காபி, சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கஃபைன் முக்கிய நரம்பு மண்டலத்தை தூண்டும் ஆற்றல் உடையது. அதிக அளவு கஃபைன் உள்ள பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

6. நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்:

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மனதிற்கு பிடித்தமான நபர்களுடன் உங்கள் நேரத்தை செலவிட்டால் போதும். பெரும்பாலும் தனிமை அதிக மன அழுத்தத்தை தர நேரிடலாம். எனவே என்றும் உங்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உடைய நபர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

7. தெளிவான வரையறைகளை உருவாக்குங்கள்:

உங்களுக்கான வேலைகளை திட்டமிடும் பொழுது எவ்வளவு வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய ஒப்புக் கொள்ளுங்கள். அதிக வேலைப்பளுவை குறுகாலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கிக் கொண்டு அதனால் மன அழுத்தத்தை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.

அதிகளவு இயர் போன் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

8. இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல்:

இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிக்கு சுற்றுலா செல்லுதல், வீட்டில் உள்ள தோட்டத்தை சுற்றி வலம் வருதல், போன்ற இயற்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினால் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கலாம்.