நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்தாகவும் இருக்கிறது. பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், கீரைகள், இறைச்சி வகைகள், கடல் உணவுகள் என அனைத்து விதமான உணவுப் பொருட்களும் மனித உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த உணவு வகைகளை எப்பொழுதும் உட்கொள்ளும் பொழுது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு நன்மை தரக்கூடிய இந்த உணவு வகை தான் ஒரு வேலை நாம் தவறான இணை உணவுடன் கொண்டால் உடலுக்கு தீமையை தந்து விடக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஆயுர்வேதத்தில் சில முக்கியமான உணவு இணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இதுபோன்ற உணவு வகைகளை நாம் சேர்த்து சாப்பிட்டால் அதனால் உடலுக்கு ஆபத்து விளைய கூடும் என்று சில உணவு வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றுள் சிலவற்றை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
சேர்த்து சாப்பிட கூடாத சில முக்கிய உணவு வகைகள்:
பாலை எப்பொழுதும் பழங்கள், புளிப்பு சுவை உடைய பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
தானிய வகைகளை மரவள்ளிக் கிழங்குடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேபோல் பழங்களுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
பழங்கள் மற்றும் பாலை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
பயறு வகைகள் மற்றும் முட்டை இரண்டும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பயறு வகைகளை பால், இறைச்சி, மீன், பழங்கள், தயிர் ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
தயிர் அல்லது மோருடன் மீன் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.
தயிருடன் சூடான பானங்கள், புளிப்பு சுவை உடைய பொருட்கள், மீன், பீன்ஸ், முட்டை ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது.
பால், தயிர், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றுடன் எலுமிச்சை பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது.
ஆயுர்வேதத்தில் இதுபோல தவறான உணவு முறை மிக நீண்ட பட்டியலாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால் அதனால் நாம் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். எனவே எப்பொழுதும் உணவை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாய் இருக்க வேண்டும்.