புதினா சமையலில் மணமும் சுவையும் அதிகரிக்க கூடிய ஒரு பொருள் ஆகும். பிரியாணி அல்லது வேறு சில உணவு வகைகளில் சிறிதளவு புதினா சேர்த்தாலே போதும் அதன் சுவையும் மணமும் தனி தான். ஆனால் இந்த புதினா வெறும் சுவையையும் மணத்தையும் மட்டும் தரக்கூடிய ஒரு பொருள் அல்ல. அதையும் தாண்டி புதினாவில் ஏராளமான நன்மைகள் புதைந்து இருக்கின்றன.
உங்கள் குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
புதினா பசி உணர்வை தூண்டக்கூடிய ஒன்று. புதினா செரிமான மண்டலத்தில் உள்ள செரிமான நொதிகள் நன்கு சுரந்திட உதவி புரிகிறது. இதன் மூலம் அஜீரணக் கோளாறுகள் சரி செய்ய உதவி புரிகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் குணங்கள் வயிற்றில் உள்ள தொற்றுக்களை சரி செய்திடவும் உதவி புரிகிறது. புதினாவில் அதிக அளவு மெத்தனால் இருப்பதால் மலச்சிக்கல், குடல் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
புதினா ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் காத்திட உதவி புரிகிறது. தண்ணீரில் ஐந்தாறு புதினா இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்து வர சுவாசப் பாதையில் உள்ள தொற்றுக்களை குறைக்க முடியும். மேலும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும். மேலும் புதினா உள்ளடங்கிய பற்பசை, மவுத் வாஷ், சுவுங் கம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது வாய் துர்நாற்றம் இன்றி இருப்பதோடு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரி செய்யப்படுகிறது.
மூளையின் செயல் திறனை அதிகரிக்க செய்ய உதவுகிறது. மேலும் இந்த புதினாவின் நறுமணமானது மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். புதினாவை நுகரும் பொழுதே நம்மை அறியாமல் மனம் அமைதி அடைவதாக தெரிவிக்கிறார்கள். மேலும் புதினாவில் நிறைந்துள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
அழகான நீண்ட நகங்களை வளர்க்க ஆசையா? உடையாத நகங்களுக்கு சூப்பரான டிப்ஸ்…!
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் இல்லாமல் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் முகத்தில் மருக்கள், தொற்றுகள், பருக்கள் ஆகியவை ஏற்படாத வண்ணம் காக்கிறது. மேலும் சாலிசிலிக் மற்றும் விட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் சருமத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி கூந்தலில் உள்ள பொடுகு, பேன் போன்ற தொந்தரவை நீங்கிட வேண்டும் என்றால் புதினாவை அரைத்து தலைக்கு தேய்த்து வரலாம். புதினாவில் உள்ள கெரோட்டின் கூந்தல் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.